Tuesday, April 17, 2012

இந்திய பாராளுமன்ற குழுவினர் - பஷில் ராஜபக்ஷ சந்திப்பு



உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய சர்வகட்சி பாராளுமன்ற குழுவினர் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவை இன்று செவ்வாய்க்கிழமை சந்தித்துக் கலந்துரையாடினர்.
"இலங்கையில் அகதிகள் பிரச்சினை 30 வருடகாலமாக இருந்துவரும் ஒன்றாகும். இருந்தபோதிலும் இடம்பெயர்ந்தோரில் 95 வீதமானோரை அனைத்து வசதிகளுடனும் அரசாங்கம் மீள்குடியமர்த்தியுள்ளது.

அவர்களுக்குத் தேவையான உட்கட்டுமான வசதிகளும் செய்துகொடுக்கப்பட்டுள்ளன. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மிகக் குறுகிய காலத்தில் வழமையான நிலைக்குக் கொண்டுவந்துள்ளோம்" என அமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீள்குடியமர்த்துவதிலும் உட்கட்டுமான வசதிகளை செய்துகொடுப்பதிலும் இலங்கை அரசாங்கத்தின் கரிசனை தொடர்பில் இந்திய சர்வகட்சி பாராளுமன்ற குழுவினர் திருப்தியடைந்ததாக அமைச்சின் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment