சிறிலங்காவுக்கு
பயணம் மேற்கொண்டுள்ள இந்திய நாடாளுமன்றக் குழுவினர், தேசியப்
பிரச்சினைக்கான அரசியல்தீர்வு மற்றும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு தொடர்பாக
சிறிலங்கா அரசாங்கத்துடன் பேச்சு நடத்தியுள்ளது.
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசுக்கும், சுஸ்மா சுவராஜ் தலைமையிலான இந்தியக் குழுவுக்கும் இடையில் இன்று இடம்பெற்ற இந்தச் சந்திப்பின்போது ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக இந்தியா வாக்களித்தது தொடர்பாக எந்தக் கருத்தும் முன்வைக்கப்படவில்லை.
இது தொடர்பாக கருத்து வெளியிட்ட சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர்,
“நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது மற்றும் அதற்கு சிறிலங்கா அரசு கொடுக்கும் முன்னுரிமை பற்றி அவர்களுக்கு விளக்கினோம்.
இந்த நடைமுறைப்படுத்தலுடன் தொடர்புடைய அமைப்புகள் தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டது.
13வது திருத்தம் தொடர்பாக கலந்துரையாடப்படவில்லை.
இந்த விடயம் நாடளுமன்றத் தெரிவுக்குழு மற்றும் அரசியல் தீர்வுக்குத் தேவையான அரசியலமைப்புத் திருத்தங்கள் என்ற நிகழ்ச்சி நிரலுக்குள் உள்ளது.
இந்தியக் குழுவினர் எந்தவிதமான அழுத்தங்களையும் பிரயோகிக்கவில்லை.
சிறிலங்கா அரசின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து அவர்களுக்கு விபரிக்கும் வாய்ப்பு கிடைத்தது.“ என்று குறிப்பிட்டார்.
அதேவேளை இந்தியக் குழுவினர், சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவை சந்தித்து வடக்கில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து கேட்டறிந்தனர்.
இதன்போது, சிறிலங்காவின் உண்மை நிலையை தமிழ்நாட்டில் வெளிப்படுத்துவதற்கு போதுமான பரப்புரையும் விழிப்பணர்வும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், நீடித்த அமைதியை ஏற்படுத்துவதற்கு இரு இனங்களுக்கும் இடையிலான சந்தேகங்கள் களையப்பட வேண்டும் என்றும் பசில் ராஜபக்ச கூறியுள்ளார்.

No comments:
Post a Comment