நாடு
கடந்த தமிழீழ அரசின் பிரதமர் உருத்திரகுமாரனைக் கைது செய்ய வேண்டுமென
ஜாதிக ஹெல உறுமயவைச் சேர்ந்த அமைச்சர் சம்பிக்க ரணவக்க பாராளுமன்றில்
கோரிக்கை விடுத்துள்ளார்.ஐ.நா. மனித உரிமைப்
பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் நாடாளுமன்றில் நேற்று
புதன்கிழமை இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே, சம்பிக்க
மேற்படி தெரிவித்துள்ளார்.
நாட்டில் உள்ள சமூகங்களுக்கு இடையில் சமாதானத்தை கட்டியெழுப்ப அரசாங்கம்
மேற்கொண்டு வரும் முனைப்புக்களை சீர்குலைத்து குழப்பங்களை ஏற்படுத்த
வெளிநாடுகளிலுள்ள தமிழீழ விடுதலைப்புலிகள் முயற்சித்து வருவதாக
குற்றஞ்சாட்டியுள்ள, சம்பிக்க, அவ்வாறானவர்கள், சுதந்திரமாக நடமாடித்
திரிவதாகவும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும்
கோரியுள்ளார்.
அத்துடன், எமது அரசுக்கு எதிராக வெளிநாட்டிலிருந்து செயற்பட்டுக்கொண்டிருக்கும் நாடு கடந்த அரசின் தலைவர் உருத்திரகுமாரனைக் கைது செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.
அத்துடன், எமது அரசுக்கு எதிராக வெளிநாட்டிலிருந்து செயற்பட்டுக்கொண்டிருக்கும் நாடு கடந்த அரசின் தலைவர் உருத்திரகுமாரனைக் கைது செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment