Monday, April 16, 2012

பெயர்களை மாற்றி செயற்படும் விடுதலைப்புலிகள்: இலங்கை குற்றச்சாட்டு

விடுதலைப்புலிகளுடனான போர் முடிந்து 3 ஆண்டுகளாகியும் இன்னும் புலிகள் வசித்து வருவதாக இலங்கை அரசாங்கம் கூறிவருகிறது.
மேலும் புலிகள், தங்களுடைய பெயர்களை மாற்றிக்கொண்டு வெளிநாடுகளில் வசித்து வருவதாக தெரிவித்த இலங்கை அரசாங்கம் விடுதலைப் புலிகளை பற்றிய தகவல்களை அளிப்பதில், வெளிநாடுகள் ஒத்துழைப்பு அளிக்க மறுக்கின்றன எனவும் குற்றம்சாட்டியுள்ளன.
இதுகுறித்து இலங்கை பாதுகாப்பு செயலர் கோத்தபையா தெரிவித்துள்ளதாவது, அவுஸ்திரேலியா முன்னிலை சோஷலிச கட்சியின் அரசியல் சபை உறுப்பினர் பிரேம்குமார் குணரத்தினம் சமீபத்தில் இலங்கைக்கு வேறு பெயரில் வந்து சென்றுள்ளார்.

இவர், இலங்கையில் கடத்தப்பட்டதாக சமீபத்தில் தகவல் வெளியானது. அவுஸ்திரேலியாவில் வசிக்கும் குணரத்தினம், அங்கு நோயல் முதலிகே என்ற பெயரில் தங்கியுள்ளார்.
இதை கொழும்பில் உள்ள அவுஸ்திரேலிய தூதர் தெளிவுப்படுத்தியுள்ளார். இலங்கையில் இருந்து தப்பிய விடுதலைப் புலிகள் பலர், வெளிநாடுகளில் வேறு பெயர்களில் செயற்பட்டு வருகின்றனர்.
இவர்களை பற்றி தகவல் தெரிவிக்கும் விடயத்தில், வெளிநாடுகள் போதிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை. ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் விடுதலைப் புலிகள் பலர் பெயரை மாற்றிக் கொண்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment