Monday, April 23, 2012

கடிவாளம் பூட்டிய கண்டறியும் பயணங்கள்:-தமிழீழத்திலிருந்து மருதநிலவன்-

Indian_del_governor_epdpஇலங்கையில் போரின் இறுதி நாட்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மனிதஉரிமை மீறல்கள் தொடர்பான சர்ச்சைகள் சூடுபிடிக்க ஆரம்பித்த பின்பு உலக நாடுகளின் கவனம் அப்பிரச்சினை மீது மையம் கொள்ள ஆரம்பித்து விட்டது. மேற்படி குற்றச்சாட்டுக்கள் தொடர்பான மறுப்புக்களை இலங்கை அரச தரப்பு எவ்வளவு உரத்த குரலில் கூவிக் கொண்டிருந்த போதிலும் சனல் – 4இ விக்கிலீக்ஸ் என்பன உட்பட உலக ஊடகங்கள் உண்மைகளை ஆதாரங்களுடன் தொடர்ந்து வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன.

ஐ.நா சபையின் மனித உரிமைகள் பேரவையின் 19வது கூட்டத்தொடரில் மேற்படி பிரச்சினை தொடர்பாக அமெரிக்காவில் இலங்கை மீதான கண்டனத் தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளதாக செய்தி வெளிவந்ததுமே பரபரப்பு மேலும் கூர்மையடைய ஆரதம்பித்தது. 47 நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்த போதும் கூட இந்தியாவில் நிலைப்பாடு தொடர்பாக இறுதி நேரம் வரையும் பலவிதமான எதிர்பார்ப்புக்களும் கேள்விகளும் எழுந்த வண்ணமேயிருந்தன.

இறுதியில் இந்தியா இலங்கைக்கு எதிராக அமெரிக்காவின் தீர்மானத்தை அறிந்து வாக்களித்து விட்டது. இறுதி நேரம் வரை இந்தியா இலங்கையை ஆதரிக்கும் அல்லது நடுநிலை வகிக்கும் என்ற இலங்கையின் எதிர்பார்ப்பு நிறைவேறாமலே போய்விட்டது.
அதையடுத்து இலங்கையின் அரசியல் வட்டாரங்களில் இந்தியாவுக்கு எதிரான முழக்கங்கள் பொங்கியெழ ஆரம்பித்தன. விமல வீரவன்ச சம்பிக்க ரணவக்கஇ குணதாச அமரசேகர போன்ற கடும்போக்கு சிங்கள தேசியவாதிகள் இந்திய எதிர்ப்புப் பிரசாரத்தை தீவிரமாக மேற்கொள்ள ஆரம்பித்தனர். இலங்கையில் வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கூட இந்தியா நம்பிக்கைத் துரோகம் செய்து விட்டது என்ற தொனியில் கருத்து வெளியிட்டிருந்தார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இந்தியாவை நேரடியாகத் தாக்காவிட்டாலும் மேற்படி தீர்மானம் தொடர்பாகக் கடும் கடும் கண்டனங்களைத தெரிவித்திருந்தார். இலங்கையின் பிரச்சினைகளில் வெளிநாடுகள் தலையிட முடியாது எனவும் மனித உரிமைகள் பற்றி எமக்கு எவரும் பாடம் சொல்லித்தர வேண்டியதில்லை எனவும் கடுமையான முறையிலே நன் எதிர்ப்பை வெளிக்காட்டினார்.
அதுமட்டுமன்றிஇ சிங்களக் கடும்போக்காளர்கள் வெளியிட்ட இந்திய எதிர்ப்புப் பிரசாரத்தைத் தடுத்து நிறுத்தவோ கண்டிக்கவோ எந்த ஒரு முயற்சியையும் எடுக்கவில்லை.
Indian delegation in Jaffna
இந்தியா இவை பற்றி எதுவுமே பெரிதாக அலட்டிக்கொள்ள வில்லை. மாறாக இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சவுக்கு தாம் ஏன் இலங்கைக்கு எதிராக வாக்களித்தார்கள் என்ற காரணத்தை விளக்கி இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் ஒரு கடிதத்தை அனுப்பி விட்டு அமைதியாய் இருந்து விட்டார்.
ஆனாலும் இ கடும்போக்கு சிங்களத் தேசியவாதிகளின் துள்ளல் சிறிதும் கூட அடங்கவில்லை. எவரும் அடக்க முயலவுமில்லை. எனினுமஇ; பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச இந்தியா தமக்கு எதிராக வாக்களித்தாலும் கூட இந்தியா தமது நட்பு நாடு என தெரிவித்திருந்தார். அமைச்சரவையில் பேச்சாளர் லக்~;மன யாப்பா அபயவர்த்தனாவும் இ சம்பிக்கஇ விமல் போன்ற அமைச்சர்களின் கருத்துக்கள் அவர்களின் தனிப்பட்டவை எனக் கூறி சமாளித்தார்.
ஆனால், இவர்கள் இருவரும் கூட அவர்களால் இந்திய எதிர்ப்பு வாதம் பரப்பப்படுவதைத் தடுக்க முயலவில்லை.
இந்நிலையில் ஏற்கனவே திட்டமிட்டபடி இந்திய சர்வகட்சிக் குழுவின் இலங்கை விஜயம் மேற்கொள்ளப்பட்டது. இதில் ஏற்கனவே தமிழ் உணர்வாளர்கள் எனக் கருதப்படும் வை.கோபாலசாமியோ, திருமாளவனோ சேர்க்கப்படவில்லை. இக்குழுவினரின் இலங்கை விஜயத்துக்கான நிகழ்ச்சிநிரல் தொடர்பாகக் கருத்து வெளியிட்ட தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா விருந்துண்ணவும் கைகுலுக்கவும் மட்டும் தமது பிரதிநிதிகளை அனுப்ப முடியாது எனக் கூறி அ.தி.மு.க உறுப்பினர்களை குழுவிலிருந்து வெளியேற்றி விட்டார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியும் இது ஒரு பயனற்ற பயணம் எனக் கூறி தி.மு.க உறுப்பினரையும் தடுத்து விட்டார்.
ஒட்டுமொத்தத்தில் கடந்த காலத்தில் தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுத்தவர்கள் எவருமின்றி இ;ந்திய நாடாளுமன்றக் குழு பாரதீய ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்றக் குழுவின் தலைவி சு~;மா சுவராஜ் தலையில் வந்து கொழும்பில் அவர்கள் வந்து இறங்கியதும் இறங்காததுமாக எரிசக்தி மின் துறை அமைச்சர் சம்பிகா ரணவக்கஇ இந்தியக் குழு வடக்குக் கிழக்கு மக்களின் பிரச்சினைகள் பற்றியோ நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் பற்றியோ ஆராயக்கூடாது எனவும் இலங்கை விவகாரங்களில் தலையிட உரிமை எதுவும் கிடையாது எனவும் எச்சரித்திருந்தார்.
Indian delegation in Jaffna
இந்த எச்சரிக்கை அவர்கள் காதுக்கு எட்டியதோ இல்லையோ அவர்கள் ஏற்கனவே இலங்கை அரசு வருந்த நிகழ்ச்சி நிரலின் படி தமது பணியை ஆரம்பித்தனர்.
இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையே இடம்பெற்ற போர் முடிவுக்கு வந்த பின்பு இந்திய நாடாளுமன்ற குழுவினரோ அமைச்சர்களோ அல்லது இந்திய ராஜதந்திரிகளோ இங்கு வரும் போது தமிழ் மக்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருப்பதுண்டு. ஆனால் வழமையாக அவர்கள் போன பின்பு ஏமாற்றமே மிஞ்சுவதுண்டு.
போர் நிறைவு பெற்ற கையுடனே மூன்று இலட்சத்துக்கு மேற்பட்ட தமிழ் மக்கள் முட்கம்பி வேலிகளுக்குள் வெளித் தொடர்பு எதுவும் கிட்டாத வகையில் அடைக்கப்பட்டு கூடாரங்களில் வாடிய நேரம் இ;ந்தியாவிலிருந்து ஒரு நாடாளுமன்றக் குழு வந்தது. அதில் தமிழ் மக்களுக்காக உரத்துக் குரல் கொடுத்து வந்த திருமாவளவன் இ கனிமொழி ஆகியோர் இருந்தனர். அவர்கள் முகாம்களுக்குச் சென்றனர். ஆனால் மக்கள் தங்கள் குறைகளைச் சொல்ல அனுமதிக்கப்படவில்லை. இராணுவத்தினரால் தயார் செய்யப்பட்ட சிலரே கதைக்க அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் “ஒரு குறையுமில்லை புலிகளிடமிருந்து தப்பி வந்ததே போதும்”; என்றனர். வந்த நாடாளுமன்றக் குழுவினரும்மன அதனை நம்பினர்.
ஆனால் , அந்நாட்களில் சிறைக் கைதிகள் போல் அமைக்கப்பட்ட மக்கள் போதிய உணவு, குடிநீர், மருத்துவ வசதிகளின்றி நோயிலும், துன்பத்திலும் வாடினர். உறவினர்கள் சென்று பார்ப்பதானால் கூட படையினர் அனுமதி பெற்று முள்ளுக்கம்பிக்கு வெளியே நின்றுதான் படையினர் முன்னிலையிலேயே பேச வேண்டும். அவர்களிடம் அரசாங்க அதிகாரிகள் புள்ளி விபரங்களைக் காட்டினார்கள். நாடாளுமன்றக் குழுவினரும் கேட்டுக் கேட்டுப் பூரித்துப் போய் விட்டார்கள்.
இறுதியில் தமிழ் மக்களின் துன்ப துயரங்களைக் கண்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்ய வந்த இந்திய நாடாளுமன்றக் குழுவினர் இலங்கை அரசுக்கு நற்சான்றிதழ் வழங்கி விட்டு சென்றனர். அதன் பிறகு பலமுறை பாதுகாப்புச் செயலர் எம்.கே. நாராயணன், வெளிவிவகார செயலர் எஸ்.எம் கிரு~;ணா ஆகியோர் வந்தனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் ஏனைய தமிழ் கட்சிகளும் ஓடி ஓடிப் போய்க் கதைத்தனர். அவர்களும் போகும் போது நம்பிக்கையளிக்கும் வாக்குறுதிகளை வழங்கி விட்டுப் போனார்கள்.
இன்றுவரை இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாகவோ மீள் குடியேறிய மக்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்துவது பற்றியோ எவ்வித முன்னேற்றமும் இல்லை. மாறாக இராணுவ மேலாதிக்கமே மேலோங்கி வருகின்றது. தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறையும் சிங்களக் குடியேற்றங்களும் தமிழ் மக்களின் நிலங்கள் இ கைத்தொழில் வளம் என்பன அபகரிக்கப்படுவதும் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.
இ;ப்படியான ஒரு நிலையில்தான் சிங்களக் கடும் போக்காளர்களின் எதிர்ப்பின் மத்தியிலும் அரச தரப்பினரின்; வழிகாட்டலின் கீழ் இந்திய நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் விஜயம் மேற்கொள்ளப்படுகிறது.
இவ்விஜயம் தொடர்பாகத் தமிழ் மக்கள் பெரும் நம்பிக்கை எதையும் கொண்டிராத போதிலும் இ;க்குழுவினர் திறந்த மனதுடன் சில உண்மைகளை அறிந்து செல்ல வேண்டும் என்பதையே எதிர்பார்த்தனர்.
ஆனால்இ இ;க்குழுவினரின் விஜயத்தின் முதல் நாளிலேயே பொருளாதார அபிவிருத்தி அமைச்சரைச் சந்தித்த போது அவர் வடக்குக் கிழக்கில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திகள் பற்றி விளக்கினார். அதையடுத்து அக்குழுவினர் அபிவிருத்தி முயற்சிகளைப் பாராட்டியதாகவும் தமிழக மக்கள் இவற்றைத் தெரிந்து வைத்திருக்கவில்லை எனவும் நாம் தமிழக மக்களுக்கு அவை பற்றித் தெளிவுபடுத்தப் போவதாகவும் நாடாளுமன்றக் குழுவினர் கூறியதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன.
அதன் அர்த்தம் அமைச்சர் காட்டிய புள்ளிவிபரங்களை அவர்கள் ஏற்றுக் கொண்டனர் என்பதுதான். ஆனால் யதார்த்தம் வேறு என்பது அவர்கள் அறிந்திருக்க நியாயமில்லை. நீதிமன்றம்இ சிறைச்சாலை, அரச செயலகங்கள் என்பன போன்ற அரச நிர்வாகப் பீடங்கள் கட்டப்படுகின்றன என்பது உண்மைதான். ஆனால் மீள் குடியேறிய மக்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்தும் வகையில் வந்த ஒரு ஒழுங்கான திட்டமும் இல்லை. உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் எந்த நடவடிக்கையும் இல்லை. அப்படி உற்பத்தி செய்தாலும் அவற்றைச் சந்தைப் படுத்தும் வசதியில்லை.
இ;ந்திய நாடாளுமன்றக் குழுவினர் உண்மை நலைமைகளைப் புரிந்து கொள்வதனால் அவர்கள் மீள்குடியேறிய மக்களை அவர்கள் இடத்திற்கு நேரில் சந்திக்க வேண்டும். அரசியல்வாதிகள் இராணுவத்தினர் பிரசன்னம் இன்றி அவர்கள் சுதந்திரமாகப் பேச அனுமதிக்க வேண்டும். அப்போதுதான் உண்மை நிலை புரியும்.
உதாரணமாகஇ முல்லை மாவட்டத்தில் இரு இடங்களில் இக் குழுவினரையும் சந்திக்க மக்கள் காத்திருந்தும் அவர்கள் சந்திக்க அனுமதிக்கப்படவில்லை. விழாக்களில் கலந்து கொண்டு விட்டு அரச அதிகாரிகளின் விளக்கங்களைக் கேட்டுவிட்டுப் போய் விட்டனர்.
ஏனெனில் இ இவர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி நிரல் தொடர்பான கடிவாளம் இவர்களிடம் இல்லை. எனினும் தமிழ் அரசியல் கட்சிகளைச் சந்தித்து நிலைமைகளைக் கேட்டறிந்தமை ஒரு பயனற்ற வி~யம்.
எனினும் ,கடிவாளம் பூட்டிய இப்பயணங்கள் மூலம் உண்மைகளைக் கண்டறிவது அவ்வளவு இலகுவான வி~யமல்ல. ஏனெனில் மக்கள் மனதிலிருந்து பேச முடியாதபடி இராணுவ புலனாய்வுப் பிரசன்னம் இருக்கும்.
இப்படி யாராவது துணிந்து கதைத்து விட்டால் காணாமற் போக வேண்டிய அபாயம் உள்ள நிலையில் எவருக்குத் தான் கதைக்கத் துணிவு வரும்.
எப்படியிருப்பினும் இக்குழுவின் பயணம் கடிவாளம் பூட்டப்பட்டதாக இருந்தாலும் தமிழ் தேசியக் கூட்டமைப்புஇ தமிழர் விடுதலைக் கூட்டணிஇ புளட் போன்ற அமைப்புகளுடன் நடத்திய பேச்சுகளிலிருந்தும் சிவில் சமூகத்தினரின் கருத்துக்கள் அடிப்படையிலும் உண்மைகளைக் கண்டறிந்து அறிக்கை சமர்ப்பித்து அதன் அடிப்படையில் இந்தியா நடவடிக்கைகளை மேற்கொண்டால் இவ்விஜயம் பயனள்ளதாக அமையும்.
அப்படி இல்லையேல், இது இந்தியா இலங்கையை சாந்தப்படுத்த மேற்கொண்ட ஒரு தூது என்றே தமிழ் ம்ககள் கருதுவார்கள்.
-தமிழீழத்திலிருந்து மருதநிலவன்-

No comments:

Post a Comment