Monday, April 23, 2012

திமுக கட்சிக்குள் சகோதர யுத்தம்: அவசரமாக தந்தையை சந்திக்க சென்னை சென்றார் அழகிரி!


alakiriமத்திய அமைச்சரும், திமுக தென்மண்டல அமைப்புச்செயலாளருமான மு.க.அழகிரி அவசர அவசரமாக இன்று (22.4.2012) அதிகாலையில் சென்னை சென்றார்.    திமுக தலைவர் கலைஞருடன்  பூதாகரமாய் வெடித்துள்ள நோட்டீஸ் விவகாரம் குறித்து ஆலோசனை நடத்துகிறார்.
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மதுரையில் தலைமை வகித்த கட்சி நிகழ்ச்சிகளை மதுரை திமுக நிர்வாகிகள் புறக்கணித்தனர்.   அழகிரியின் ஆதரவாளர்கள் என்பதால் அவர்கள் அவ்வாறு நடந்துகொண்டனர்.  இது ஸ்டாலினை டென்ஷன் ஆக்கியது.    பொருளாளரின் நிகழ்ச்சியை புறக்கணித்த 17 பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது கட்சி தலைமை.

இதையடுத்து வெளிநாட்டு பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பியதும்  மதுரைக்கு செல்லாமல் சென்னையில் முகாமிட்டிருந்த அழகிரி,  நேற்று முன் தினம்  அவசர அவசரமாக மதுரை சென்றார்.  அவரது ஆலோசனையின் படி 17 பேரும் நோட்டீஸுக்கு விளக்கம் எழுதி தலைமைக்கு அனுப்பி விட்டனர்.
இந்நிலையில் நேற்று ஆதரவாளர்கள் 17 பேருடன் அவசர ஆலோசனை நடத்தியுள்ளார் அழகிரி.    அப்போது நோட்டீஸ் விவகாரம் பூதாகரமாய் வெடித்துள்ளது.
ஆலோசனையின் முடிவின்படி இன்று அதிகாலை அவசர அவசரமாக சென்னை சென்றார்அழகிரி.
இன்றும், நாளையும் திமுக தலைவர் கலைஞருடன் ஆலோசனை நடத்திய பிறகு,  சென்னையில் இருந்து புறப்பட்டு டெல்லி செல்கிறார்.    செவ்வாய்க் கிழமை நடக்கும் பாராளுமன்றத்தில் கூட்டத்தில் கலந்துகொள்கிறார்.


No comments:

Post a Comment