தீவிர அரசியலில் இருந்து விலகி, இராஜதந்திரப் பணியில் இணைந்து கொள்ளும் நோக்கில் அவர் முக்கியத்துவம் மிக்க ஐ.நாவுக்கான தூதுவர் பதவிக்குப் போட்டியில் குதித்துள்ளார்.
நியுயோர்க்கில் ஐ.நாவுக்கான நோர்வேயின் தூதுவராகப் பணியாற்றும் மோர்டென் வெற்லன்ட் நான்கு ஆண்டு பதவிக்காலத்தை முடித்து ஒஸ்லோ திரும்பவுள்ளார்.
ஐ.நாவுக்கான தூதுவர் பதவிக்கு எரிக் சொல்ஹெய்முடன் மேலும் மூவர் போட்டியில் உள்ளனர்.
எனினும் இந்தப் பதவிக்கு எரிக் சொல்ஹெய்ம் நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
இந்தநிலையில், நியுயோர்க்கில் ஐ.நாவுக்கான இலங்கையின் தூதுவர் நிலையில், போர்க்குற்றம் சாட்டப்படும் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா பணியாற்றுகின்ற நிலையில், எரிக் சொல்ஹெய்ம் அவருக்குத் தலைவலி கொடுக்கலாம் என்று இலங்கை கலக்கமடைந்துள்ளது.
ஐ.நாவுக்கான தூதுவராக எரிக் சொல்ஹெய்ம் நியமிக்கப்பட்டால், அது இலங்கைக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தும் என்று இலங்கை அரசதரப்பு எதிர்பார்க்கிறது.
இலங்கைக்கு எதிராக, அனைத்துலக போர்க்குற்ற விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்று நோர்வே பகிரங்கமாகவே வலியுறுத்தி வருகிறது.
சில காலங்களுக்கு முன்னர் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனைச் சந்தித்தபோது, எரிக் சொல்ஹெய்ம் கூட இதையே வலியுறுத்தியிருந்தார்.
இவ்வாறான ஒருவர் ஐ.நாவில் உயர் பதவியைப் பெறுவது தமக்கு நெருக்கடியாக அமையும் என்று,இலங்கை அரசதரப்பு கலக்கமடைந்துள்ளதாகவும் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:
Post a Comment