Saturday, April 14, 2012

Sinhala and Tamil New Year.

Press Statement
Hillary Rodham Clinton
Secretary of StateWashington, DC

On behalf of President Obama and the people of the United States, I am delighted to send best wishes to Sri Lankans around the world as you celebrate Sinhala and Tamil New Year.
This celebration brings people together to renew bonds of friendship and family. It also gives Sri Lankans of all backgrounds, living inside and outside the country, an opportunity to help build a
prosperous, democratic nation defined by tolerance and respect for human rights. As a partner and friend of Sri Lanka for more than 150 years, the United States looks forward to supporting your efforts to foster national reconciliation and development, and to build even stronger ties between our people.
Congratulations and best wishes for a safe and happy holiday and a prosperous New Year.


தமிழ் சிங்கள மக்களுக்கு அமெரிக்கா தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியை தெரிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமாவின் சார்பில் அந்நாட்டு ராஜாங்கச் செயலாளர் ஹிலரி கிளின்ரன் உத்தியோகபூர்வமாக இந்த வாழ்த்துச் செய்தியை இன்று வெளியிட்டுள்ளார்.
உலகம் முழுவதிலும் புலம் பெயர்ந்து வாழும் இலங்கையர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துச் செய்தியை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறொம் என அவர் வெளியிட்டுள்ள குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு பண்டிகை உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள ஓர் வாய்ப்பாக அமைந்துள்ளது எனவும் அவர் தனது செய்தியில் தெரிவித்துள்ளார்.
நாட்டில் வாழும் மற்றும் வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் ஒன்றிணைந்து சுபீட்சமானதும் ஜனநாயாகமானதுமான இலங்கையை கட்டியெழுப்ப முயற்சி எடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். கடந்த 150 ஆண்டுகளாக இலங்கையுடன் பேணி வந்த உறவுகளைப் போன்றே தொடர்ந்தும் சிறந்த உறவுகளைப் பேண அமெரிக்கா விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்திப் பணிகளுக்கு அமெரிக்கா முழுமையான ஆதரவளிக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கக் கூடியதும், நெகிழ்வுத் தன்மையுடன் கூடியதுமான இலங்கையை உருவாக்க உள்நாட்டு வெளிநாட்டு வாழ் இலங்கையர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென அவர் தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment