சிங்கள பேரினவாதியும் இனப்படுகொலைவாதியுமான ராஜபக்ச, பிரித்தானிய அரசியின் 60வது வருட நிறைவு விழாவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழு கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது.

அதற்கு பிரித்தானியா வாழ் தமிழர்கள் அனைவரையும் அணிதிரளுமாறு பிரித்தானியாவில் இருந்து ஜெனீவா வரை நீதி கேட்டு நடைபயணம் மேற்கொண்ட சிவந்தனும், பிரித்தானியாவில் 2009ம் ஆண்டு உண்ணாவிரதம் இருந்த பரமேஸ்வரனும் பிரித்தானிய தமிழ் மக்களுக்கு அழைப்பு விடுத்து இணைந்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்கள்.

அந்த அறிக்கையில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் முதல் மொழி, தமிழ் மொழி, உலகிற்கு நாகரீகம் கற்றுக்கொடுத்தது தமிழினம் இன்று கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

கடந்த 60பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழர்கள் மீதான இனப்படுகொலைகள் தொடங்கப்பட்டு முள்ளிவாய்க்காளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களின் உயிரிழப்புக்களோடு இரண்டு இலட்சத்திற்கு மேற்பட்ட மக்களை இதுவரை சிங்கள பேரினவாத அரசு இனப்படுகொலை செய்துள்ளது.

அத்தோடு சிங்கள பேரினவாதத்தின் தமிழன அழிப்புக்கள் நிற்பதாக இல்லை இன்றும் இன அழிப்புக்கள் பல வழிகளில் தொடர்ந்தும் அரங்கேற்றப்படுகின்றது. சர்வதேச சமூகம் தங்களுடைய நாட்டு நலன்களுக்கு ஏற்றவாறு நாடகமாடுகின்றது.

தமிழர்களின் அழிவிற்கு நீதிகிடைக்க தமிழர்கள் நாம்தான் தொடர்ந்தம் போராட வேண்டும் எமக்காக எவரும் போராட முன்வரமாட்டார்கள் அப்படிப்பட்ட சே குவேராக்கள் இன்று இல்லை.

எனவே இதற்கு முன்பு பேரினவாதி பிரித்தானியா வந்த போது விரட்டியடித்தது போல் மீண்டும் நாம் விரட்டியடிக்க வேண்டும். சனல் 4ன் கொலைக்களம் வெளியான இந்த நிலத்தில் இனப்படுகொலைவாதி இலகுவாக சுற்றித் திரிவானாக இருந்தால் மற்ற நாடுகள் இந்த இனப்படுகெலைவாதியை வேறு நிகழ்வுகளுக்கு அழைப்பதை தடுக்க இயலாமற் போய்விடும்.

ஆகவே காலத்தின் தேவை உணர்ந்து பேரினவாதியும் இனப்படுகொலைவாதியுமான ராஜபக்சவை விரட்டியடிக்க இந்த மாதம் 26ம் திகதி 4-7 மணிவரை பிரித்தானிய பிரதமரின் அலுவலகத்திற்கு முன்பாக10 Downing Street,  London SW1A 2AA, (nearest tube station Westminster,) எனும் இடத்தின் அணிதிரளுமாறு பிரித்தானியா வாழ் மக்களை உரிமையோடு கேட்டுக்கொள்கின்றோம்.
http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/y-ukmahindarcomm%20(1).jpg