Saturday, May 05, 2012

விழித்துக்கொண்ட கலைஞரின் தமிழீழ முழக்கம்:- தமிழீழத்திலிருந்து விஸ்ணு-

karunanithi-bigஐ.நா சபையின் தலைமையில் தமிழ் மக்கள் வாழும் பகுதிகளிலும், புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்கள்….மத்தியிலும் தனித்தமிழ் ஈழத்துக்கான ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என தி.மு.க தலைவர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் கருத்து வெளியிட்டிருந்தார். அதுமட்டுமன்றி 1983ல் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட பெரும் இனப்படுகொலைக் கலவரங்களை அடுத்து உருவாக்கப்பட்ட ‘ரெசோ’ என அழைக்கப்படும் தமிழ் ஈழ ஆதரவு அமைப்பு சில ஆண்டுகளில்
கருணாநிதியால் கலைக்கப்பட்டது. தற்சமயம் அவ்வமைப்புக்கு புத்துயிர் ஊட்டப்பட்டதுடன் அதன் தலைவராகக் கருணாநிதி அவர்கள் தெரிவுசெய்யப்பட்டார்.

மேலும, அவ்வமைப்பின் முதற் கூட்டத்திலேயே தமிழ் ஈழம் அமைப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையில் ஒரு பொதுவாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டும் எனக் கோரிக்கை முன் வைக்கப்பட்டதோடு அது தொடர்பாக ஐ.நா. சபையில் வலியுறுத்துமாறு இந்திய மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பது எனவும் தீர்மானம் எடுக்கப்பட்டது.
ஏற்கனவே அதிரடி அறிவிப்புக்களுக்கும் பின்பு அவற்றை வார்த்தை ஜாலங்கள் மூலம் மழுப்புவதற்கும் பெயர் பெற்ற கலைஞர் அவர்களின் இந்தத் திடீர் மாற்றத்தையும் அதிரடி அறிவிப்பையும் பற்றி இலங்கைத் தமிழ் மக்கள் பெரிதாக அக்கறை கொண்டிருக்க வாய்ப்பில்லை.
ஆனால், சகல நெருக்கடி நேரங்களிலும் தமிழ் மக்களுக்காக உரத்துக்குரல் கொடுத்துவரும் சுப வீரபாண்டியன், திராவிடக் கழகத் தலைவர் வீரமணி பெருச்சிந்திரனார் போன்றவர்கள் இந்த ‘ரெசோ’ அமைப்பில் பங்கு கொண்டிருப்பது சிறிது நம்பிக்கையைத் துளிர் விடச் செய்திருக்கிறது.

இவர்கள் அரசியலுக்கு அப்பாற்பட்ட அதாவது, தேர்தல் அரசியலுக்கு அப்பாற்பட்ட அதில் பங்கு கொள்ளாத தமிழ் உணர்வாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், எச்சந்தர்ப்பத்திலும் சளைத்துவிடாது இலங்கைத் தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுத்துக் கொண்டும் போராட்டங்களை நடத்திக் கொண்டும் வரும் திருமாவளவன், பழ.நெடுமாறன், புலவர் புலமைப்பித்தன,சீமான் போன்றோர் ஏன் இவ்வமைப்பில் இணைக்கப்படவில்லை என்ற கேள்வி இங்கு எழத்தான் செய்கிறது.
இக் கேள்விக்கு இந்த ‘ரெசோ’ அமைப்பின் உருவாக்கமும் கருணாநிதியின் அரசியல் சித்து விளையாட்டுகளில் ஒன்று தான் என்ற பதில் கிடைக்காமல் இருக்க வேண்டும் என்பதே தமிழ் மக்களின் அடிப்படை விருப்பமாகும்.
எனினும் இ கருணாநிதி அவர்கள் வெளியிட்ட தமிழீழம் அமைக்கும் கருத்தானது ஏற்படுத்திய சில எதிரொலிகளை இலகுவில் புறம்தள்ளி விட முடியாது.
அண்மையில் இலங்கை சென்று திரும்பிய இந்திய நாடாளுமன்றக் குழுவைச் சேர்ந்த காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் தாங்கள் இலங்கையில் தங்கியிருந்த போது எந்த ஒரு தமிழரும் தமிழ் ஈழம் பற்றிப் பேசவில்லை எனத் தெரிவித்திருந்தார்.
இலங்கை வந்திருந்த இந்திய நாடாளுமன்றக் குழுவினர் சுற்றிவர இராணுவப் பாதுகாப்பின் மத்தியில் மக்களுடன் கலந்து நின்ற இராணுவப் புலனாய்வாளர்கள் மத்தியில்  அருகில் நின்ற இலங்கை அரசின் அமைச்சர்கள் மத்தியில் தமிழ் ஈழம் பற்றிப் பேச முடியுமா? அப்படி மீறிப் பேசினால் இந்தியக் குழுவினர் போன பின்பு பேசியவருக்கு என்ன நடக்கும் என்பதை காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தன் அவர்கள் அறியாதவரா? இப்படியான ஒரு நிலையில் இலங்கையில் தன்னிடம் எவரும் தமிழ் ஈழம் பற்றிப் பேசவில்லை எனக்கூறி கருணாநிதியின் கருத்தை மறுத்துரைப்பதை நல்நோக்கம் கொண்டதானதாகவோ நேர்மையானதாகவோ கருதி விட முடியாது.
அதேவேளையில் கருணாநிதியின் இ;க்கருத்துத் தொடர்பாக இலங்கையின் பாதுகாப்புச் செயலாளரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்ச முதலில் கருணாநிதி இந்தியாவில் தனித்தமிழ்நாடு அமைத்து விட்டுத் தமிழீழம் பற்றிப் பேசட்டும் எனச் சீறி விழுந்திருக்கிறார். வழமை போலவே கருணாநிதி தனது வார்த்தை வல்லமையால் சாட்டையடி கொடுத்து அவரின் வாயை அடைத்து விட்டார். அதாவது இந்தியாவில் தமிழ் மக்களுக்கு இன அடிப்படையில் அநீதி இழைக்கப்படவில்லை. அதனால் தனித்தமிழ் நாடு வேண்டியதில்லை எனவும், சிங்கள அரசு இலங்கைத் தமிழ் மக்கள் மீது தொடர்ந்து கொடுமைகளை இழைத்து விடுவதால் தமிழ் ஈழம் அவசியம் எனக் கலைஞர் அடித்துச் சொல்லி விட்டார்.
சித்தன், கருணாநிதி,கோத்தபாய ராஜபக்ச என எவரும் தமிழ் ஈழம் பற்றி எப்படி எப்படியான கருத்துகளை வெளியிட்ட போதும் அது இலங்கைத் தமிழ் மக்களின் அசைக்க முடியாத ஒரு ஜீவாதாரக் கோரிக்கையாகும். தவிர்க்க முடியாத தேவைகளின் அடிப்படையில் பரிணாம வளர்ச்சி பெற்று உயர்ந்த வடிவமாக தமிழீழக் கோரிக்கையாக மலர்ந்தாகும்.
தமிழ் மக்கள் ஐக்கிய இலங்கைக்குள் சிங்கள மக்களுடன் சம உரிமையுடன் வாழும் வகையில் முதலில் சம அந்தஸ்துக் கோரிக்கையையே முன்வைத்தனர். அது தொடர்ந்து நிராகரிக்கப்பட்ட நிலையில் தமிழ் மக்கள் தந்தை செல்வா தலைமையில் சமஷ;டிக் கோரிக்கையை முன் வைத்தனர். அதுவும் கூட நிராகரிக்கப்பட்டு ஆயுத வன்முறைகள் மூலம் அக்கோரிக்கைக்குப் பதில் வழங்கப்பட்டு 1956ல் ஆயிரக் கணக்கான தமிழ் மக்களின் உயிர்கள் பறிக்கப்பட்டன. சொத்துக்கள் அழிக்கப்பட்டன. எனினுமஇ; ஐக்கிய இலங்கைக்குள் எமது உரிமைகளைப் பெற்ற மேற்கொள்ளப்பட்ட பண்டா செல்வா ஒப்பந்தம் இ டட்லி செல்வா ஒப்பந்தம் என்பனவெல்லாம் கிழித்தெறியப்பட்டன.
அந்த அனுபவங்களின் அடிப்படையில் தமிழ் ஈழம் ஒன்றே விடிவுக்கு வழி என்ற வகையில் வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதற்கு 1977ல் தமிழ் மக்கள் தமது பூரண அங்கீகாரத்தை வழங்கினர். எனினும் அதற்கும் ஆயுத வழி மூலம் பதிலளிக்கப்பட்டது.
இந்நிலையில் தான் தவிர்க்க முடியாதபடி தமிழ் ஈழக் கோரிக்கை ஆயுதப் போராட்டத்தை எடுத்து வளர்;ச்சியடைய ஆரம்பித்தது. ஒரு சிறு பொறியாக ஆரம்பித்து தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டம் ஏராளமான தியாகங்கள் மத்தியில் வடக்குக் கிழக்கின் மூன்றில் ஒரு பகுதியைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருமளவுக்கு பலம் பெற்றது.
இன்று எமது ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டு விட்ட போதிலும் தமிழ் ஈழக் கோரிக்கை என்பது தமிழ் மக்களின் அடிப்படைக் கோரிக்கை. அது அவர்களுக்கு வேறு எவராலும் வழங்கப்பட்ட வரமல்ல. நாம் அடைந்த பெருந்தோல்வி காரணமாக நாம் உடனடியாக அதை நோக்கி நகரமுடியாவிட்டாலும்இ அது தமிழ் மக்களின் இறுதி இலட்சியமாகும். அதைவிட வேறு வழி எதுவும் இல்லையெனச் சிங்கள ஆட்சியாளர்கள் ஒவ்வொரு நாளும் எமக்குப் பாடம் சொல்லித் தந்து கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி தலைமையில் ‘ரெசோ’ அமைப்பினர் தமிழீழக் கொள்கையைப் பிரகடனம் செய்துள்ளனர். இங்கே இப்பிரகடனத்தை அடுத்து என்ன செய்யப் போகின்றனர் என்பதுதான் இங்குள்ள கேள்வி.
இலங்கையில் போரின் இறுதி நாட்களின் போது இலங்கைத் தமிழ் மக்களுக்காக தமிழகமே கொந்தளித்துக் கொண்டிருந்த போது இளைஞர்கள் தங்களைத் தாங்களே தீமூட்டி உயிர்த்தியாகம் செய்து கொண்டிருந்த போது கலைஞர் மத்திய அரசு போர் நிறுத்தம் செய்யத் தூண்டாவிடில் பதவிகளை இராஜினாமா செய்வோம் என்றார். இராஜினாமாக் கடிதங்கள் கலைஞருடன் நின்று விட்டன. போர் நிறுத்தம் கோரி உண்ணாவிரம் இருந்த கலைஞர் போர் நிறுத்தப்பட்டுவிட்டதாகக் கூறி மாலையில் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். அவ்வேளையிலஇ; முள்ளிவாய்க்காலில் நாளாந்தம் ஆயிரக் கணக்கானோர் விமானக்குண்டு வீச்சுக்களாலும் இ எறிகணைகளாலும் செத்து விழுந்து கொண்டிருந்தனர்.
இன்றைய கலைஞரின் தமிழீழக் கோரிக்கையும் இப்படி ஒரு நாடகம் தானே என்ற தமிழ் மக்கள் மத்தியில் எழுவது தவிர்க்க முடியாததாகும்.
எனவேதான் , ‘ரெசோ’வின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது தொடர்பாக தமிழ் மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.
இலங்கை அரசின் சீனா பக்கச் சார்பு, போர்க்குற்றங்கள் , மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச நியமங்களுக்கு மதிப்பளிக்காமை, உள்ளூரில் ஜனநாயக சுதந்திரங்கள் தொடர்பான அத்துமீறல்கள் என்பன இன்று அமெரிக்கா உட்பட மேற்குலக வல்லரசுகளை இலங்கை பக்கம் கவனத்தைத் திருப்ப வைத்துள்ளன.
இலங்கையை கட்டுக்குள் கொண்டு வர சர்வதேசம் பல்வேறு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. இதில் தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பாகவும் தீவிர கவனம் செலுத்தப்படுகிறது.
ஆனால், அமெரிக்கா தனது சர்வதேச விவகாரங்களின் ஒழுங்குக்கு அமைய தென்னாசிய விவகாரங்களை இந்தியா மூலமாகவே கையாள விரும்புகிறது. இந்தியா இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் பிராந்திய வல்லரசு என்ற அடிப்படையிலும் இலங்கையின் அயல்நாடு என்ற அடிப்படையிலும் அமெரிக்கா இந்தியாவைப் புறந்தள்ளி விட்டு இலங்கை தொடர்பாக எந்த ஒரு நடவடிக்கையையும் மேற்கொள்ளப் போவதில்லை.
எனவே, இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினையில் நாம் விரும்பியோ விரும்பாமலோ இந்தியாவின் பங்களிப்பு முக்கியமானதாகும். ஆனால் இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் இலங்கை அரசுடன் ஒரு மென்போக்கையே கையாண்டு வருகின்றனர். இலங்கை இந்திய இராணுவம் பலப்படுத்த இலங்கைத் தமிழ் மக்களைப் பலி கொடுப்பதைப் பற்றி அவர்கள் எவ்விதத்திலும் தயங்குவதோ கலைப்படுவதோ இல்லை. கடைசியாகக் கூட அமெரிக்கா இலங்கைக்கு எதிராகக் கொண்டு வந்த தீர்மானத்தைப் பலப்படுத்துவதில் இந்தியா மேற்கொண்ட தீவிர முயற்சிகளை நினைவு கூறலாம்.
இந்த நிலையில் ‘ரெசோ’வின் கடமை முக்கியமானதும் உறுதியானதுமாக இருக்க வேண்டும். அதாவது தமிழ் ஈழம் உருவாக்குவதோ அல்லது தேசியம, சுயநிர்ணயம் என்ற அடிப்படையில் வடக்குக் கிழக்கு இணைந்த ஒரு சுயாட்சியை ஐக்கிய இலங்கைக்குள் உருவாக்குவதோ எதுவாயிருப்பினும் இந்திய மத்திய அரசு இலங்கை தொடர்பாக ஒரு உறுதியான நிலைப்பாட்டை எடுக்கும்படி அழுத்தம் கொடுக்க வேண்டும்.
இன்றைய சர்வதேசச் சூழல் இந்திய மத்திய அரசின் தி.மு.க.வுக்கு உள்ள பலம் எதிர்வரும் தேர்தலில் இந்தியக் காங்கிரஸ் கூட்டணி வேண்டி நிற்கும் தமிழக வாக்குகள் என்பன இதற்கும் சாதகமான நிலைமைகளையே உருவாக்கியுள்ளன. எனவேஇ ‘ரெசோ’வின் உருவாக்கம் மட்டும் போதுமானதல்ல. அதன் நிலைப்பாட்டில் உறுதியும் தொடர் போராட்டங்களும் அவசியமானவையாகும்.
அப்படி ஒரு தெளிவான நிலைப்பாட்டை எடுத்து உறுதியான நடவடிக்கைகளை எடுக்கத் தவறினால் இப்போ உருவாகியுள்ள நல்ல சூழ்நிலையை தவற விட்ட குற்றத்திற்கு மட்டுமன்றி குழப்பியடித்த குற்றத்திற்கும் ‘ரெசோ’ ஆளாக வேண்டி வரும். கலைஞர் மத்திய அரசைத் திருப்திப்படுத்த முயன்று ஈழத்தமிழர்களுக்குத் துரோகம் செய்து தன்னைத் தானே ஏற்கனவே கறைப்படுத்திக் கொண்டது போன்று மீண்டும் ஒரு முறை அழிக்க முடியாத கறைக்குள் தோய வேண்டி வரும்.
எப்படியிருந்த போதும் தற்சமயம் விழித்துக் கொண்ட கலைஞரின் விழிப்பும,; தமிழக வழக்கமும் நேர்மையானதாகவும் உண்மையானதாகவும் இருக்க வேண்டும் என்பதுதான் ஒட்டுமொத்தமாக உள்ள உலகத் தமிழ் மக்களின் அபிலாசையாகும். ஏனெனில் , தமிழீழக் கோரிக்கை என்பது ஏறக்குறைய இரண்டு லட்சம் தமிழ் மக்களின் உயிரிழப்பிலும், ஏராளமானோரின் ஊனமுறல்களிலும; பல்லாயிரம் கோடி பெறுமதியான சொத்திழப்பிலும் கட்டியமைக்கப்பட்டது. வீரச்சாவடைந்த ஒவ்வொரு மாவீரனின் தியாகத்திலும் உறுதி பெற்றது.
- தமிழீழத்திலிருந்து விஸ்ணு-
source:sankathi

No comments:

Post a Comment