
குறித்த மூன்று சடலங்களும் 35 வயதுக்கும் 40 வயதுக்கும் இடைப்பட்டவர்களுடையதென தெரிவிக்கப்படுவதுடன் அந்தந்த பகுதி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த மூன்று சடலங்களும் நேற்று முன்தினம் மீட்கப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைகளில் வைக்கப்பட்டுள்ளன.
வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அவிசாவளை வீதி கொதட்டுவ பகுதியில் நேற்று முன்தினம் மாலை 4.30 மணியளவில் ஒரு சடலமும் எத்திமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விலஓய பகுதியில் நேற்று முன்தினம் காலை 8.30 மணிக்கு ஒரு சடலமும் நீர்கொழும்பு கொச்சிக்கடை முருதாத மகா ஓயா பகுதியில் நேற்று முன்தினம் காலை 7.55 மணியளவில் ஒரு சடலமுமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.
source:sankathi
No comments:
Post a Comment