Monday, May 07, 2012

தருவதில் உடன்பாடு இல்லாத ஒரு குழுதான் இலங்கை சென்று திரும்பியுள்ளது: திருமாவளவன்ஈழத்தை பற்றி கவலைப்படாத தனிஈழம்


Thirumavalavan-திட்டக்குடி சென்ருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: 
ஈழத்தை பற்றி கவலைப்படாத தனிஈழம் தருவதில் உடன்பாடு இல்லாத ஒரு குழுதான் இலங்கை சென்று திரும்பியுள்ளது. அந்த குழு சட்டபூர்வமான அதிகாரம் இல்லாமல் தான் சென்று திரும்பியுள்ளது. இந்த பயணம் பயனில்லாத பயணமாக அமைந்துவிட்டது.

இன்றைய சூழ்நிலையில் இந்திய அரசு இலங்கையில் கலாச்சார சீரழிவுகளை தடுத்து நிறுத்த வேண்டும். சிங்கள ராணுவத்தின் அத்துமீறல்களை தடுக்க வேண்டும். தமிழர் பகுதியிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இந்திய அரசு உடனடியாக இந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு திருமாவளவன் கூறினார்.


No comments:

Post a Comment