Saturday, May 19, 2012

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளர் மீது இனந்தெரியாதோர் தாக்குதல்


யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளர் தர்ஷானந் இனந்தெரியாத ஆயுததாரிகளால் கடுமையாக தாக்கப்பட்டு யாழ். வைத்தியசாலை அவசரசேவைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
jaffna-studentஇன்று காலை 8.30 மணியளவில் யாழ். கலட்டிப் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வழமை போல இன்று காலை பல்கலைக்கழகம் நோக்கி துவிச்சக்கரவண்டியினில் வந்து கொண்டிருந்த இவர் மீது கலட்டி சந்தியில் வைத்து நால்வர் கொண்ட ஆயுததாரிகள் கும்பலொன்று தாக்குதல் நடத்தியுள்ளது.
கூரிய இரும்பு கம்பிகளால் தாக்கப்பட்டதில் படுகாயமடைந்த நிலையில், கலைப்பீட இறுதியாண்டு மாணவரும், பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளருமான தர்சானந்த் யாழ். போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முற்று முழுதாக படையினரது பிரசன்னம் மிக்கதும் கூடிய மக்கள் நடமாட்டமிக்கதுமான கலட்டி சந்தியில் இத்தாக்குதல் நடந்துள்ளது.



No comments:

Post a Comment