Saturday, May 19, 2012

யாழ்-பல்கலைக்கழகத்தில் இராணுவத்தினரது கெடுபிடிகளுக்கு மத்தியிலும் முள்ளிவாய்க்கால் நினைவஞ்சலி அனுஷ்டிப்பு.


jaffnaஆயிரம் ஆயிரம் தமிழ் மக்கள் கொன்றழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் படுகொலையின் 3ம் ஆண்டு நினைவு தினம் இன்று தமிழ் மக்களால் உலகளாவிய ரீதியில் நினைவகொள்ளப்படும் நிலையில் பலத்த இராணுவ நெருக்குவாரங்களுக்கு மத்தியில் யாழ்-பல்கலைக்கழகத்தில் மாணவ மாணவியரால் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று காலை 10.40 மணியளவில் ஆரம்பமான இந்நிகழ்வு 12.15 வரை தொடர்ச்சியாக நடைபெற்றது. போரில் படுகொலை செய்யப்பட்ட பொது மக்களுக்கு தம் இன்னுயிரை ஆகுதியாக்கி மாவீரர்களுக்கும் இங்கு அஞ்சலி
செலுத்தப்பட்டதோடு, அவர்கள் சார்பாக மெழுகு வர்த்திகள் ஏற்றப்பட்டும் அஞ்சலிகள் செலுத்தப்பட்டன.நூற்றுக்கணக்கான பல்கலைக்கழக மாணவ மாணவிகள் கலந்து கொண்டன இவ்வஞ்சலி நிகழ்வில், மாணவ மாணவிகளின் அஞ்சலி உரைகள் இடம்பெற்றதோடு பேராசிரியர் ஒருவரும் உரையாற்றினார்.
இதேவேளை, இவ்வஞ்சலி நிகழ்வினை ஒழுங்கு செய்த மாணவர் ஒன்றியச் செயலாளர் பல்கலைக்கழகத்திற்கு அண்மையில் வைத்து, இனந்தெரியாத நபர்களால் தாக்கப்பட்டும், ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வுகள் எவையும் தடையின்றி நடைபெற்றன.















No comments:

Post a Comment