இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் மரணத்தைக் கொச்சைப்படுத்தி கொலையாளிகளுக்கு ஆதரவாக பேசி வரும் விடுதலைப் புலிகள் ஆதரவுத் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ராஜிவின் நினைவு தினமான நேற்று தமிழக காங்கிரஸார் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது. இலங்கைத் தமிழர்கள் படுகொலையின் மூன்றாவது ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி சர்வதேச இனப் படுகொலை நாளாகக் கருதி அப் படுகொலைக்கு நியாயம் கேட்டு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் பொதுச் செயலாளர் திருமாவளவன் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் நெடுமாறன், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் உள்ளிட்டோர் பொதுக் கூட்டங்கள் மற்றும் பேரணியை சென்னை மற்றும் கோவையில் நடத்தினர்.
பொதுக் கூட்டங்களில் ராஜீவ் கொலையை கொச்சைப்படுத்தியும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அவமதிக்கும் வகையிலும் சிலர் பேசியுள்ளனராம். இவர்களின் பேச்சுக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியுமே தமிழக காங்கிரஸார் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஞானதேசிகன் தலைமையில் சத்தியமூர்த்தி பவனில் ராஜீவ் உருவப் படத்திற்கு மலர் அஞ்சலி, இலவச மருத்துவ முகாம் உள்ளிட்ட பல்வேறு விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசி வரும் தலைவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ராஜீவ் நினைவிடத்தில் ராகுல் காந்தி மக்கள் சேவகர்கள் சார்பில் உண்ணாவிரதம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment