Monday, May 21, 2012

சரத் பொன்சேகா விடுதலை: ஜனாதிபதி கையெழுத்து




இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை விடுதலை செய்ய ஜனாதிபதி உத்தர விட்டார். நேற்று இரவு கட்டார் நாட்டுக்கு பயணம் மேற்கொண்டார். அதற்கு முன்னதாக இந்த உத்தரவில் கையெழுத்திட்டார். அந்த உத்தரவு நகல் ஜனாதிபதியின் தலைமை அதிகாரி காமினி செனரத்திடம் வழங்கப்பட்டுள்ளது.
அதை அவர் நீதி அமைச்சிடம் நாளை வழங்குவார். இந்தத் தகவலை ஜனாதிபதியின் செய்தித் தொடர்பாளர் பந்துல ஜயசேகர நிருபர்களிடம் தெரிவித்தார். எனவே, இன்னும் ஓரிரு நாளில் சரத் பொன்சேகா விடுதலை செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment