Friday, May 25, 2012

தமிழரசு மாநாடு நடைபெறவிருந்த மண்டபம் எரிப்பு! மட்டு நகரில் பெரும் பதற்றம்!!

மட்டக்களப்பில் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு நாளை வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த தேவநாயகம் மண்டபம் இனந்தெரியாத நபர்களால் இன்று மாலை தீக்கிரையாக்கப்பட்டதையடுத்து மட்டக்களப்பில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மண்டபத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சத்தங்களையடுத்தே மண்டபம் தீப்பற்றி எரியத் தொடங்கியதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.


இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வருடாந்த மாநாடு மட்டு நகரிலுள்ள தேவநாயகம் மண்டபத்தில் நாளை வெள்ளிக்கிழமை முதல் மூன்று நாட்களுக்கு நடைபெறவிருந்த நிலையிலேயே இன்றுமாலை 4.00 மணியளவில் இனந்தெரியாதவர்களால் குறிப்பிட்ட மண்டபம் தீவைத்து எரிக்கப்பட்டதாக தமிழரசுக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
இன்று பிற்கல் 4.00 மணியளவில் குறிப்பிட்ட மண்டபத்தில் வெடிச் சத்தங்கள் கேட்டதாகவும் அதனைத் தொடர்ந்து மண்டபம் தீப்பற்றி எரியத் தொடங்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் இச்சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பான நிலை காணப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment