Friday, May 11, 2012

ஹிலாரியைச் சந்திக்க ஒரு திட்டத்துடன் தான் பீரிஸ் வரவேண்டும் –இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர்

வொசிங்டனில் நேற்று நடத்திய நாளாந்த செய்தியாளர் சந்திப்பில் சிறிலங்கா விவகாரம் தொடர்பாக அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

கேள்வி - சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் அடுத்தவாரம் இங்கு வரப்போகிறார். அவரது நிகழ்ச்சி நிரல் என்னவாக இருக்கும் என்று உங்களுக்குத் தெரியுமா? எப்போது அவர்…
நுலன்ட் - அவரது நிகழ்ச்சிநிரல் என்னவாக இருக்கப் போகிறது? அவரது நிகழ்ச்சி நிரல் என்னவென்று உங்களுக்கு அனுப்புகிறேன்.
கேள்வி  – இல்லை. இராஜாங்கச்செயலரின் நிகழ்ச்சி நிரல்.
நுலன்ட் -  நல்லது. நாங்கள் சிறிலங்காவின் நல்லிணக்க விவகாரங்கள் குறித்து பேசி வருகிறோம் என்பது உங்களுக்குத் தெரியும் என்று நான் நினைக்கிறேன்.
அவர்கள் அதுபற்றிய ஒரு திட்டத்துடன் முன்வர வேண்டிய தேவை உள்ளது. நாங்கள் அவர்களுடன் பேசப் போகிறோம்.
பலதரப்பு விவகாரங்கள் மற்றும் பிராந்திய விவகாரங்கள் குறித்தும் பேசப்படும் என்று நான் அனுமானிக்கிறேன்.
இவ்வாறு விக்ரோரியா நுலன்ட் பதிலளித்துள்ளார்.

No comments:

Post a Comment