Friday, May 11, 2012

மதுரை பாஜக மாநாட்டில் ஈழத்தமிழர் விவகாரம் குறித்து அத்வானி, சுஸ்மா முக்கிய உரை

advani-sushmaமதுரையில் இன்றுகாலை ஆரம்பமாகும் பாஜகவின் 5வது மாநில மாநாட்டில் ஈழத்தமிழர் பிரச்சினை குறித்து கட்சியின் தலைவர்கள் அத்வானி மற்றும் சுஸ்மா சுவராஜ் ஆகியோர் முக்கிய உரைகளை நிகழ்த்தவுள்ளனர். 
இதுகுறித்து தகவல் வெளியிட்ட பாஜகவின் தேசிய செயலர் முரளிதரராவ், இலங்கை தமிழர் விவகாரம், மீனவர்கள் பிரச்சினை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பாஜகவின் மூத்த தலைவர் அத்வானியும் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சுஸ்மா சுவராஜும் விளக்கிக் கூறவுள்ளனர் என்று தெரிவித்தார்.

அண்மையில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த சுஸ்மா சுவராஜ் அங்குள்ள நிலைமைகள் குறித்து விளக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளை, கட்சியின் மூத்ததலைவர் அத்வானி ஈழத் தமிழர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்தும், பாஜகவின் நிலை குறித்தும் எடுத்துக் கூறுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மாநாட்டில் ஈழத்தமிழர் விவகாரம் குறித்து முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளதாக கட்சியின் தேசிய செயலர் முரளிதரராவ் அண்மையில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment