Thursday, May 24, 2012

மகிந்தவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்க பிரான்ஸ் தமிழர்களுக்கு அழைப்பு !



இங்கிலாந்து மகாராணியார் எலிசபெத்தின் விருந்தினராக பிரித்தானியாவுக்கு வருகை தரவுள்ள சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக, பிரான்ஸ் தமிழர்களையும் அணிதிரளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
2009ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு எதிரான பிரான்ஸ் தமிழர்களின் மக்கள் போராட்டங்களை ஒருங்கிணைத்தவரும், தற்போது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இளையோர்
பிரதிநிதியாகவும் உள்ள மகிந்த சிவசுப்பிரமணியம் இந்த அழைப்பினை விடுத்துள்ளார்.
பிரான்ஸ் தமிழ் இளையோர்களின் ஒருங்கிணைப்பில், மகிந்த ராஜபக்சவின் பிரித்தானிய வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக, பிரான்சில் உள்ள பிரித்தானிய தூதரகத்திற்கு முன்பாக, எதிர்ப்பு போராட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மகிந்தன் சிவசுப்ரமணியம் அவர்கள் அறிவித்துள்ளார்.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை, பிரித்தானிய தூதரகத்திற்கு அருகாமையில்A PLACE DE LA MADELEINE (Angle de royal, pr�s de l�ambassade- Metro : Madeleine, Ligne 12 et 8) , மாலை 15 h - 18 h வரைக்கு இந்த எதிர்ப்பு போராட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இளையோர்களை ஒருங்கிணைப்பில் இடம்பெறும் இப்போராட்டத்திற்கான பரப்புரைகள் சமூக இணையத்தளங்கள் ஊடக தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த எதிர்ப்பு போராட்டத்தில் அனைத்து தமிழர் அமைப்புக்களையும் ,சமூக அரசியல் பிரதிநிதிகள் மற்றும் மாணவர்கள் என அனைவரையும் அணிதிரளுமாறு மகிந்த சிவசுப்பிரமணியம் அழைப்பு விடுத்துள்ளார்.
நாதம் ஊடகசேவை


Back to News   Bookmark and Share Seithy.com

No comments:

Post a Comment