

செய்யப்பட்டது. அறிக்கை மீதான விசாரணையை ஜூலை 23-ம் தேதிக்கு உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு ஒத்திவைத்துள்ளது. ஆனந்த் குழு அறிக்கை விவரம் வருமாறு:நிலநடுக்க பாதிப்பு இருக்காது: அணையின் நீர்மட்டத்தை அதிகபட்சம் 152 அடி வரை உயர்த்தினாலும்கூட நில நடுக்க பாதிப்புகளின்றி அணை பாதுகாப்பாகவே இருக்கும். கடந்த காலத்தில் ஏற்பட்ட இரு நிலநடுக்கங்களை வைத்து இது உறுதிபடுத்தப்பட்டது. அண்மையில் ஏற்பட்ட நில நடுக்கத்தின்போது முல்லைப் பெரியாறு அணை மற்றும் இடுக்கி அணைக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அணையை மேலும் வலுப்படுத்த வசதியாக கேபிள் மூலம் நங்கூரம் நடலாம். பேபி டேம் வலுவிழந்து விட்டதாக எழுந்த சந்தேகம், ஆய்வின் முடிவில் நிராகரிக்கப்பட்டு விட்டது. நீரியல் ரீதியாக... முல்லைப் பெரியாறு அணை நீரியல் மற்றும் கட்டுமான ரீதியாகவும் நிலநடுக்கப் பாதிப்புகளின்றியும் உறுதியாக உள்ளது. 1979-ம் ஆண்டில் 136 அடியாகக் குறைக்கப்பட்ட, அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம். அதிகபட்சமாக வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது அûணைக்கு, வினாடிக்கு 2.12 லட்சம் கனஅடி நீர்வரத்து வரலாம். 142 அடியை நீர் எட்டும் போது பாதுகாப்பான முறையில் 13 வாயில்கள் வழியாக நீரை வெளியேற்றலாம். முல்லைப் பெரியாறு அணையின் பிரதான மற்றும் பேபி அணை கட்டுமான ரீதியாக பாதுகாப்பானவை. 1979-ம் ஆண்டுக்கு முந்தைய நிலையில் அந்த அணைகளில் நீரைத் தேக்கலாம். நீரைத் தேக்கும்போது பராமரிப்பு நடவடிக்கைகளை உரிய நேரத்தில் மேற்கொள்ள வேண்டும். புதிய அணை பற்றி மறுபரிசீலனை தேவை:முல்லைப் பெரியாறு அணை வலுவுடனும் பாதுகாப்புடனும் இருப்பதால் புதிய அணை கட்ட வேண்டும் என்ற கேரளத்தின் யோசனையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அதிகாரமளிக்கப்பட்ட குழு வலியுறுத்துகிறது.மாற்று யோசனை-1 கேரள அரசு புதிய அணை கட்ட விரும்பினால் தொழில்நுட்ப, பொருளாதார ரீதியாக திட்டக்குழு மற்றும் மத்திய வனத்துறை ஒப்புதல் பெற்று சொந்த செலவில் கேரளம் அணையைக் கட்டலாம். அந்த அணையின் செயலாக்கத்தை கேரளமும் தமிழகமும் முறையாக உடன்படிக்கை செய்து கொண்ட பின் நிறைவேற்றலாம். அந்த அணையின் கட்டுப்பாடு, பராமரிப்பு, ஒழுங்குமுறை போன்றவற்றை மேற்கொள்ள தன்னிச்சையான குழுவை அமைக்கலாம். மத்திய அரசின் பிரதிநிதி தலைமையில் இயங்கும் அந்தக் குழுவில் தமிழகம், கேரளத்தின் பிரதிநிதிகள் இடம்பெறலாம். புதிய அணை கட்டப்படும் வேளையில் தற்போதுள்ள அணையை வலுப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொள்ளலாம். மாற்று யோசனை-2: எதிர்காலத்தில் முல்லைப் பெரியாறு அணையில் பழுதுபார்ப்பு, வலுப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட வேண்டுமானால் மத்திய அரசு வரையறுத்துள்ள வழிகாட்டுதலின்படி பணிகளை மேற்கொள்ள வேண்டும். அந்தப் பணியின்போது மக்களின் அச்சத்தை போக்கவும் அவர்களின் சொத்துகள், வனம், உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இரு மாநில அரசுகளும் ஏற்றுக்கொண்டு அதிக செலவினங்களின்றி புதிய அணையைக் கட்டலாம்.பாதாள நீர்வழிப் பாதை: பெரியாறு அணையில் இருந்து வைகை ஆற்றுப் பள்ளத்தாக்குக்கு நீர் வரும் வகையில் பாதாள நீர்ப்பாதை அமைக்கும் மாதிரியை தமிழகம் தயாரித்துள்ளது. இதன் மூலம் 106.5 அடி நீரைத் தேக்கிக் கொண்டு வரமுடியும். பாதாள நீர்ப்பாதையை அணைக்கு உரிமையாளரான தமிழகம்தான் கட்ட வேண்டும். இது தொடர்பான உடன்பாட்டை மத்திய நீர்வள அமைச்சகம் முன்னிலையில் கேரளத்துடன் தமிழகம் செய்து கொள்ள வேண்டும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணை 116 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.அரசியல் தீர்வு காண... நீதிபதி டி.கே. ஜெயின் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பான வழக்கை வெள்ளிக்கிழமை விசாரித்தது. அந்த அமர்வில், நீதிபதிகள் பி. சுதர்சன ரெட்டி, தீபக் வர்மா, சி.கே. பிரசாத், அனில் ஆர். தவே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். விசாரணையின்போது, அணையின் ஸ்திரத்தன்மை தொடர்பாக உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் தலைமையிலான அதிகாரமளிக்கப்பட்ட குழுவின் அறிக்கையை சீல் வைக்கப்பட்ட உறையில் நீதிபதிகளிடம் பதிவாளர் அளித்தார்.உறையைப் பிரித்து அறிக்கையின் நகல்களை தமிழக, கேரள அரசுகளின் வழக்குரைஞர்களுக்கு அளிக்குமாறு நீதிபதி டி.கே. ஜெயின் கூறினார். பிறகு, கேரளம் சார்பில் ஆஜரான வழக்குரைஞர்கள் ஹரிஷ் சால்வே, ராஜீவ் தவன் ஆகியோர் "அணை விவகாரத்தில் அரசியல் தீர்வு காண கேரள அரசு விரும்புகிறது' என்று தெரிவித்தனர். அப்போது நீதிபதி டி.கே.ஜெயின், "நாங்களும் அதையே விரும்புகிறோம், எதிர்பார்க்கிறோம்' என்றார்
No comments:
Post a Comment