
காந்தி சிலை உடைக்கப்பட்ட சம்பவத்திற்கு இந்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன? என நேற்று நாடாளுமன்றத்தில் தமிழக உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதிலளித்து உரையாற்றிய, வெளிவிவகார இணை அமைச்சர் அகமட்,
காந்தி சிலை உடைக்கப்பட்ட சம்பவம் பற்றி அறிந்ததும், உடனடியாக இராஜதந்திர வழிமுறைகளின்படி, சிறிலங்கா அரசுடனும், கிழக்கு மாகாண அரசுடனும் நாம் தொடர்பு கொண்டோம். சம்பவம் குறித்து உடனடியாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறும், சிலையை திருத்த நடவடிக்கை எடுக்குமாறும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளதாகத் தெரிவித்தார்
No comments:
Post a Comment