இந்த நிகழ்வில் பிரித்தானியப் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் உட்பட
பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பைச் சார்ந்த உறுப்பினர்
ஒருவரும்,
பிரித்தானியத் தமிழர் பேரவையைச் சேர்ந்த திரு.ரவி அவர்களும், தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் திரு.சிறீதரன் அவர்களும்,
தமிழீழத் தேசிய உணர்வாளரும், திரைப்பட இயக்குனருமான திரு.கெளதம் அவர்களும்,
அக்ட் நவ் அமைப்பின் நிறுவனர் திரு.ரிம் மார்ட்டின் அவர்களும் என பலர்
உரையாற்ரினர்.
முள்ளிவாய்க்கால் பேரழிவின் நினைவாக பிரித்தானிய பாராளுமன்ற எதிர்கட்சித்
தலைவர் திரு. எட் மிலிபாண்ட் அவர்களும், உலகத் தமிழர் பேரவையின் தலைவர்
வணபிதா இமானுவேல் அவர்களும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும்,
திரைப்பட இயக்குனருமான திரு.சீமான் அவர்களும் வழங்கிய உரைகள் அகன்ற
திரையில் ஒளிபரப்புச் செய்யப்பட்டது.
மேடையின் வலதுபுறமாக வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி படுகொலை செய்யப்பட்ட
மக்களின் படங்களுக்கு மக்கள் மலர்தூவி வணங்கினர். இந்த நிகழ்வின் போது
இலங்கை மீதான சர்வதேச போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்தும் "ஈ பெட்டிசன்"
மற்றும் மகிந்த ராஜபக்சவின் வரவைத் தடுக்கும் தபால் அட்டைகள் போன்ரன மக்கள்
மத்தியில் வழங்கப்பட்டு போர்த்திசெய்யப்பட்டதை காணமுடிந்தது.
வேற்றினத்தவர்கள் அதிகமாகக் கூடும் இப்பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்வில்
ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டிருந்தனர். ஆங்காங்கே தமிழின
அழிப்பை எடுத்துக்காட்டும் பதாதைகளும், பனர்களும் வைக்கப்பட்டிருந்ததைக்
காணமுடிந்தது.
இறுதியில் உறுதியேற்போடு நிகழ்வுகள் யாவும் நிறைவு பெற்றன.
|
No comments:
Post a Comment