இலங்கைக்குள்
பிரவேசித்த சனல்-4 ஊடகவியலாளரும், அறிவிப்பாளருமான சிராணி சபாரட்னம் என்ற
இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட பெண் நாடு கடத்தப்பட்டுள்ளார்.
குறித்த ஊடகவியலாளரின் கணவரும், சனல்- 4 ஊடகத்தின் பணிப்பாளருமான
ஸ்டுவர்ட் கொஸ்ரேவும் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். இந்த இருவரும்
இலங்கை குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தினால் கறுப்புப் பட்டியல்
இடப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய புலனாய்வுப் பிரிவினர் குறித்த இருவரையும் கைது செய்து நாடு கடத்தியுள்ளனர். நாடு கடத்துவதற்கு முன்னர் இவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
சிரானி சபாரட்னம் ஏழரை மணித்தியாலங்கள் நாட்டில் தங்கியிருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. பிரித்தானிய கடவுச் சீட்டைப் பயன்படுத்தி அவர் நாட்டிற்குள் பிரவேசித்துள்ளார்.
இதற்கு முன்னர் பல தடவைகள் வெவ்வேறு பெயர்களில் குறித்த பெண் ஊடகவியலாளர் நாட்டிற்குள் பிரவேசித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

No comments:
Post a Comment