போர்க்குற்றவாளி மகிந்தவின் பிரித்தானிய வரவைக் கண்டித்து இன்று (06.06.2012) காலை 8:00 மணிக்கு முன்னர் இலண்டன் மான்சன் கவுசுக்கு முன்னால் ஒழுங்குசெய்யப்பட்டிருக்கும் ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்து கொள்வதற்காக பாரிஸ் லாச்சப்பல் பகுதியில் இருந்து ஒழுங்கு செய்யப்பட்ட பேருந்து நேற்று நள்ளிரவு தமிழ் உணர்வாளர்களுடன் புறப்பட்டுச்சென்றது.
இன்று பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் அந்தந்த நாட்டு ஊடகவியலாளர்கள் எனப் பலரும் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக வரும்வேளை, 1,50,000 இற்கும் மேற்பட்டஅப்பாவித் தமிழர்களை இனவழிப்புச் செய்த போர்க்குற்றவாளி மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக மாபெரும் ஆர்ப்பாட்டம் பிரித்தானியாவில் நடைபெறுகின்றது.
இதற்கு புலம்பெயர் நாடுகள் பலவற்றிலும் இருந்து போக்குவரத்து ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. பெரும் எண்ணிக்கையான மக்கள் இந்த உணர்வெழுச்சியில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment