Friday, June 08, 2012

தமிழர் போராட்ட தாக்கமே, ஜனாதிபதியின் உரை இரத்துச் செய்யப்பட்டமைக்கான காரணம்: பிரஸ் டி.வி


பிரித்தானியாவில் இருந்து திருப்பியனுப்பப்படும் அகதிகள் முறையற்ற ரீதியில் இலங்கையில் நடத்தப்படல் மற்றும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் பிரித்தானியா இலங்கை அகதிகளை நாடுகடத்தும் திட்டத்தை நிறுத்தவேண்டும் என்பவற்றின் தாக்கமே இலங்கை ஜனாதிபதியின் பிரித்தானிய உரை இரத்து என்று பிரஸ் டி.வி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.இலங்கை ஜனாதிபதியின் பிரித்தானிய விஜயம் மற்றும் அவருக்கு எதிராக பிரித்தானியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் பிரஸ் டி.வி ஆவணத் தொகுப்பை வெளியிட்டுள்ளது.


இதில் அகதிகள் திருப்பியனுப்பப்படும் சம்பவங்கள் மற்றும் அவர்கள் இலங்கையில் சித்திரவதைக்கு உள்ளாகும் சம்பவங்கள் குறித்து விபரிக்கப்படுகின்றன.
இந்தநிலையில், இலங்கை பாதுகாப்பான இடம் என்பதை ஐக்கிய நாடுகள் சபை உறுதிப்படுத்தும் வரை அகதிகளை திருப்பியனுப்பக் கூடாது என்ற மனித உரிமை ஆர்வலர்களின் கருத்துக்களையும் பிரஸ் டி.வி ஒளிப்பரப்பியுள்ளது.
இலங்கையில் காலணித்துவத்தை கொண்டிருந்த நாடு என்றவகையில் பிரித்தானியாவுக்கு இது தொடர்பில் பொறுப்பு உள்ளதாகவும் பிரஸ் டி.வி குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment