Thursday, June 07, 2012

சிங்கள அமைச்சரே வெளியேறுக! - கோவையில் ஆர்ப்பாட்டம்!

கோவையில் கரும்பு நிறுவனம் ஒன்று ஏற்பாடு செய்த கருத்தரங்கத்திற்கு சிறப்பு விருந்தினராக வருகைவந்த, சிங்கள இனவெறியன் இராசபக்சே அரசின் அமைச்சர் ரேஜினால்டு ஒல்டுகூரியை கண்டித்து அவர் தங்கியிருந்த கோவை அவினாசி சாலையில் உள்ள ஹோட்டல் லீ மெரிடியன் இன்று தமிழ் உணர்வாளர்களால் முற்றுகையிடப்பட்டது.

இன்று (07.06.2012) காலை 10 மணியளவில் ம.தி.மு.க. சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட 40க்கும் மேற்பட்ட உணர்வாளர்கள் முதலில் கைது செய்யப்பட்டனர்.


அதனைத் தொடர்ந்து, அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கோவை வடக்கு கிளைச் செயளாலர் தோழர் பா.சங்கர் தலைமையில், த.இ.மு செயளாலர்கள் கு.ரசேசுக்குமார், பிறை.சுரேசு,வே.திருவள்ளுவன், மா.தளவாய்சாமி உள்ளிட்ட த.தே.பொ.க. தோழர்களும்,விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தோழர்களும் என 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

பெரியார் தி.க., நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட மேலும் பல அமைப்புகள் இன்று தொடர் முற்றுகைப் போராட்டங்களில் ஈடுபடவுள்ளனர்.

இதுவரை கைது செய்யப்பட்டத் தோழர்களை தமிழகக் காவல் துறையினர், சூளூர் பகுதியிலுள்ள ஒர் மண்டபத்தில் தங்க வைத்துள்ளது.

கைதான தோழர்களைப் பாராட்டுவோம்! போராட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் உறுதியேற்போம்!

- தலைமைச் செயலகம்,
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி.

No comments:

Post a Comment