தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களின் 12 வயது மகன் பாலச்சந்திரனை, இலங்கை இராணுவம் சுட்டுக்கொன்றது என்ற செய்தியை இதுவரை பல ஊடகங்கள் வெளியிட்டிருந்தது. அதனைத் தவிர இச் செய்தியை சனல் 4 தொலைக்காட்சியும் வெளியிட்டது யாவரும் அறிந்ததே. இருப்பினும் இலங்கை இராணுவம் சுட்டுக்கொன்றது, சுட்டுக்கொன்றது என்று எல்லா ஊடகங்களும் தெரிவித்தபோதிலும், குறிப்பாக எவர் இப் படுகொலைகளை மேற்கொண்டிருந்தனர் அவர்களின் பெயர் என்ன என்பது தொடர்பாக இதுவரை எந்த தகவல்களும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்க விடையமாகும். எமக்கு கிடைத்த உறுதியான தகவலின் அடிப்படையில், சிறுவன் பாலச்சந்திரன் எப்போது, எங்கே, யார் யாரால் சுட்டுக்கொல்லப்பட்டார் என்ற விடையங்கள் தற்போது தெளிவாகியுள்ளது.
போர் முடிவுற்றதாக இலங்கை இராணுவம் அறிவித்த மே 19ம் திகதி அதிகாலை 7.30 மணிக்கு நந்திக்கடல் களப்பின் மேற்குப் புறமாக பாலச்சந்திரன் இராணுவத்திடம் சென்று சரணடைந்துள்ளார். இராணுவத்தின் 4ஆவது விஜயபாகு படைப்பிரிவின், முத்துபண்டாவின் தலைமையில் இருந்த 08 பேர் கொண்ட இராணுவப் படையணியிடம் இவர்கள் சரணடைந்ததாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விடுதலைப் புலிகளின் தலைவரது பிரத்தியேக பாதுகாப்பு உறுப்பினர் இருவருடன் பாலச்சந்திரன் இராணுவத்தினரிடம் சரணடைந்துள்ளார். இவர்களோடு மேலும் மூவர் பாதுகாப்புக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

பாலச்சந்திரனிடம் பெறப்பட்ட தகவல்களை கமல் குணரத்ன உடனடியாக பாதுகாப்புச் செயலாளருக்கு தொலைபேசி ஊடாக அறிவித்துள்ளார். இந்தத் தகவல்கள் அனைத்தையும் பாதுகாப்புச் செயலாளர் கருணாவிற்கு அறிவித்துள்ளார். இதன்போது பாலச்சந்திரன் எதிர்காலத்தில் அச்சுறுத்தலாக வரக்கூடும் என்பதுடன், சிறு வயது என்பதால் நீதிமன்றத் தண்டனைகளிலிருந்தும் தப்பிவிடுவதற்கு சாத்தியம் இருப்பதாகவும், எனவே சிறுவனை கொன்றுவிடுவதே சரியான முடிவு எனவும் பாதுகாப்புச் செயலாளருக்கு கருணா கூறியுள்ளார் என மேலும் அறியப்படுகிறது. இதற்கமைய மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவை தொலைபேசியில் தொடர்புகொண்ட பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ, மேஜர் ஜெனரலின் தனிப்பட்ட மேற்பார்வையில் பாலச்சந்திரனை சுட்டுக் கொன்று, தடயங்களையும் அழித்துவிடுமாறு உத்தரவிட்டுள்ளார்.
பாலச்சந்திரனின் கொலை தொடர்பாக பிரித்தானியாவின் ''சனல் 4'' தொலைக்காட்சியும் பல தகவல்களை வெளியிட்டிருந்த நிலையில், இந்தப் படையணியில் இருந்த இராணுவ அதிகாரியொருவரே மேற்கண்ட தகவல்களை கசியவிட்டுள்ளார். குறிப்பிட்ட இராணுவ அதிகாரியின் மகன் ஒருவர் சமீபத்தில் தீராத நோய் ஒன்றினால் பீடிக்கப்பட்டுள்ளதாகவும், தன் முன் நிலையில் பாலச்சந்திரனிற்கு நடந்த கொடுமைகளை, தான் வெளியே சொன்னால்தான் தன் பழி தீரும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து 14 வயது பச்சிளம் பாலகன் என்று கூடப் பாராமல், அவனை கொலைசெய்தது பிரிகேடியர் கமல் குணரத்னவே என்பது தற்போது உறுதிசெய்யப்பட்டுள்ளது. விரைவில் இச் சாட்சி தந்த ஒளிநாடாவும் அதிர்வு இணையத்தால் வெளிடப்படும் என்பதனை அறியத்தருகிறோம் !
No comments:
Post a Comment