Saturday, June 16, 2012

தமிழினம் தலைநிமிருமா? தாழ்ந்து போகுமா?-ஈஸ்வரன்-

_45793445_007345228-22009 மே 19
வெற்றி மேல் வெற்றிகளைக் குவித்து விடுதலையை நோக்கி வேகமாக முன் சென்ற விடுதலைப் போராட்டம் முள்ளிவாய்க்கால் மண்ணில் வங்காள விரிகுடாவிற்கும் நந்திக் கடலுக்கும் மத்தியில் தோற்கடிக்கப்பட்டு சிதைக்கப்பட்ட நாள் அது. இலட்சத்திற்கு மேற்பட்ட மனித உயிர்களின் பலியில், பல ஆயிரம் போராளிகளின் உயிர்க்கொடையில்,
கோடானகோடி பெறுமதியான சொத்துக்களின் இழப்பில,; கணவனை இழந்த விதவைகள், பிள்ளைகளை இழந்த பெற்றோர் ஆகியோரின் கண்ணீரில,; ஏராளமானோரின் உடலுறுப்புகளின் இழப்பில் பச, தாகம், தூக்கமின்மை போன்ற ஒவ்வாமைகளுக்கு முகம் கொடுக்கும் மன உறுதியுடன் சிறுகச் சிறுகக் கட்டி வளர்க்கப்பட்டு வளர்ந்து கொழுந்து விட்டு எரிந்த விடுதலைப் போர் அன்று சர்வதேசச் சதிக்குள் சிக்கி நிர்மூலமானது. ஏறக்குறைய 4 இலட்சம் மக்களை ஏதிலிகளாக்கி அகதி முகாம்களுக்குள் குவித்தது. அது திறந்த வெளி முட்கம்பிச் சிறைக்குள் முடக்கியது.
அன்று தமிழ் மக்களிடம் எழுந்த கேள்விதான் தமிழினம் இனித் தலை நிமிருமா அல்லது தாழ்ந்து போகுமா என்பது. சிங்கள ஆட்சி பீடம் தமது போரின் வெற்றியின் மூன்றாவது ஆண்டையும் மமதையுடன் கொண்டாடி முடிந்து விட்டது. ஆனால், தமிழ் மக்கள் மத்தியில் அன்று எழுந்த கேள்விக்கு இன்று வரை விடை கிடைக்கவில்லை. சாதகமான விடை கிடைப்பதற்குரிய அறிகுறிகளும் கண்களில் படவில்லை.
ஆனால், மிஞ்சியிருக்கும் எமது உரிமைகள் மேலும் மேலும் பறிக்கப்படுகின்றன. எமது இன அடையாளங்களை அழிக்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எமது இந்து, முஸ்லிம், கத்தோலிக்க வழிபாட்டுத் தலங்களை நோக்கி அம்புகள் ஏவப்படுகின்றன. எமது நிலங்கள் பல்வேறு வழிகளிலும் அபகரிக்கப்படுகின்றன. நாம் ஜனநாயக வழியில் எமது எதிர்ப்பைத் தெரிவிக்கும் உரிமை கூட ஆயுத மிரட்டல் வழிமுறைகள் மூலம் மறுக்கப்படுகிறது.
இப்படியான ஒரு நிலையில் எந்த ஒரு தமிழ் மகளிடமும் தமிழினம் தலைநிமிருமா அல்லது தாழ்ந்து போகுமா என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்;ட ஒரு அமைப்பு. இது ஒரு காலத்தில் ஜனநாயக வழியிலான தமிழ் மக்களின் தேசியக் குரலாக ஒலித்தது. தமிழீழ விடுதலைப் புலிகள் களத்தில் இல்லாத போது தமிழ் மக்கள் தங்கள் தலைமைச் சக்தியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஏற்றுக் கொண்டனர். அதன் அடிப்படையில் கடந்த பாராளுமன்றத் தேர்தலிலும் உள்ளுராட்சி சபைத் தேர்தல்களிலும் தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குத் தமது பேராதரவை வழங்கினர். அதன் காரணமாக இலங்கை அரசும் தவிர்க்க முடியாத படி தமிழ் தேசியக் கூட்டமைப்பினூடாகவே இலங்கையின் இனப்பிரச்சினையை அணுக வேண்டியுள்ளது. அதே போன்று சர்வதேச நாடுகளும் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகத் தமிழ் தேசியக் கூட்டமைப்பையே பார்க்கின்றனர்.
எனவே, இன்று தமிழ் மக்களின் தலைமைச் சக்தி தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பதற்கு இரண்டாவது கருத்து இருக்க முடியாது.
ஆனால், ஒரு அடக்கியொடுக்கப்படும் இனத்தின் தலைமை என்பது வெறும் அதிகாரம் சம்பந்தப்பட்ட பிரச்சினையல்ல. அது ஒரு பாரிய பொறுப்பு. தமது மக்களின் உரிமைகளை நியாயமான முறையில் பெற்றுக் கொள்ளும் வகையிலான விவேகமும் நேர்மையும் அர்ப்பணிப்பும் ராஜதந்திரமும் விலைபோக முடியாத நேர்மையும் கொண்ட ஒரு சக்தியாக தம்மைத் வடிவமைத்துக் கொள்ள வேண்டும்.
கடந்த கால அனுபவங்களிலிருந்து கற்றுக் கொண்டு தற்போதைய நிலைமைகளுக்;கேற்ப வியூகங்களை வகுத்து முன் செல்ல வேண்டும். பொது உடன்பாட்டின் அடிப்படையில், பொது எதிரிக்கு எதிராக ஐக்கியப்படக் கூடிய சகல சக்திகளையும் ஐக்கியப்படுத்த வேண்டும். ஐக்கியம் என்ற பேரில் எமது நோக்கங்களிலிருந்து தவறி விடாமல் எமது தலைமைப் பண்பைப் பேண வேண்டும்.
இவையெல்லாம் சுலபமான விடயங்களல்ல. இப்பாதையில் நாம் நடக்கும் போது ஏற்படும் ஒரு சறுக்கல் கூட எம்மைக் குப்புற விழுத்தி விடலாம்.
இவையெல்லாம்  தமிழ் மக்களின் தலைமைச் சக்தியாகத் தன்னைத் தக்க வைக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பு சுமக்க வேண்டிய பொறுப்புகள். அப்படியானால் மட்டும் தான் தமிழினம் தலை நிமிருமா அல்லது தாழ்ந்து போகுமா என்ற கேள்விக்குச் சாதகமான பதிலைத் தேட முடியும்.
மேற்குறிப்பிட்ட வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு தலைமை தாங்கிச் செல்ல வேண்டுமெனில் அது சில விசயங்களைத் தமிழ் மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்.
முதலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு கட்சியா அல்லது பல கட்சிகளின் கூட்டா என்பது தெளிவு படுத்தப்பட வேண்டும். விடுதலைப்புலிகள் இருக்கும் வரை இது ஒரு கட்சி போலவே இயங்கி வந்தது என்பதை எவரும் மறுத்து விட முடியாது. ஆனால் தற்சமயம் இது பல கட்சிகளின் கூட்டணி போன்று செயற்படுவதாகவே கூறப்படுகிறது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பது ஒரு கட்சியா அல்லது கூட்டணியா என்பது தொடர்பாக பேச்சுகள் இடம்பெற்றதாகச் செய்திகள் வெளிவந்தன. ஆனால் திட்டவட்டமான முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை. ஆனால் இது எப்படி இயங்கப்போகிறது என்பதை விரைவில் தமிழ் மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனிக்கட்சியாய் இயங்கினால் என்ன ஒரு கூட்டணியாக இயங்கினாலென்ன தமிழ் மக்களின் தலைமைச்சக்தி தமிழ் தேசியக் கூட்டமைப்புத்தான். அதாவது ஒரு கட்சி தான் தலைமைச்சக்தியாக மாற்ற முயன்றாலோ கூட்டமைப்பைச் சிதைக்க முயன்றாலோ அது தமிழ் மக்களுக்கும் தமிழ் மக்களின் ஐக்கியத்திற்கும் எதிராகச் செய்யப்படும் துரோகம் என்றே கருதப்படும்.
அண்மையில் மட்டக்களப்பில் இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் மாநாடும் அதன் பிரதிபலிப்புகளும் தமிழ் மக்கள் மத்தியில் சில கேள்விகளை எழுப்பியுள்ளதுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மீதான நம்பிக்கையைப் பலவீனப்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளது.
தமிழரசுக் கட்சி தனியாகத்  மாநாட்டை நடத்தியதன் மூலம் ஒரு தெளிவான செய்தியைச் சொல்லி  விட்டிருந்தது. அதாவது தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பது ஒரு கட்சியல்ல. அது தமிழரசுக் கட்சி என்ற ஒரு கட்சியும் வேறு சில கட்சிகளும் இணைந்து அமைக்கப்பட்ட கூட்டணி என்ற செய்திதான் அது. அதைத் தவறு என்று சொல்லி விட முடியாது. ஏற்கனவே எந்தக் கட்சியிலும் உறுப்பினராக இல்லாமல் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேரில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சிலர் தமிழரசுக் கட்சி மாநாட்டில் தமிழரசுக் கட்சியின் உறுப்புரிமையைப் பெற்றுக் கொண்டனர். ஒருவர் தான் விரும்பும் ஒரு கட்சியில் உறுப்புரிமை பெறுவது அவரின் சொந்த விருப்பமாகையால் அதைப்பற்றியும் எவரும் விமர்சிக்க முடியாது.
ஆனால், எந்த ஒரு கட்சியும் தமது சிறப்பு மாநாடுகளை நடத்தும் போது தமது சகோதரக் கட்சிகளின் உறுப்பினர்களைச் சிறப்பு விருந்தினராக அழைப்பது மரபு. அவ்வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள ஏனைய கல்விப் பிரதிநிதிகளைத் தமிழரசுக் கட்சி சிறப்பு விருந்தினர்களாக அழைக்கவில்லை.
ஒரே கூட்டணியில் உள்ள சகோதரக் கட்சிகளை அக்கட்சி தனது மாநாட்டில் சிறப்பு விருந்தினராக அழைக்கவில்லை என்றால் அங்கு உண்மையான ஐக்கியம் நிலவுகின்றது என்பதை ஏற்றுக் கொள்ள முடியுமா? தமிழரசுக் கட்சியின் மாநாட்டில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய கட்சியின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தால், குறைந்த பட்சம் வாழ்த்துரைகளையாவது வழங்கியிருந்தால் தமிழ் கட்சிகளின் ஐக்கியம் பற்றிய ஒரு நம்பிக்கை தமிழ் மக்கள் மத்தியில் தக்கவைக்கப்பட்டிருக்கும்.
அது மட்டுமன்றிஇ தமிழரசுக் கட்சி தன் உறுப்புரிமை பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களை மட்டும் மீள்குடியேற்றமஇ; விவசாயம,; மீன்பிடிஇ வெளிவிவகாரக் கொள்கை பரப்பல் போன்ற துறைகளுக்கு இணைப்பாளர்களாக நியமித்துள்ளது. இது ஏனைய கட்சிகளை ஓரங்கட்டுவது போன்ற ஒரு தோற்றப்பாட்டை ஏற்படுத்தாதா? இது கட்சியின் நியமனங்கள் என்றும் இவை உட்கட்சி விவகாரங்கள் எனவும் காரணம் காட்டப்படலாம்.
ஆனால், இது பாராளுமன்ற உறுப்பினர்களுடன் தொடர்புடைய பிரச்சினைகளாதலால் ஏனைய கட்சியினரும் இணைந்து கொள்ள வேண்டியதே நியாயமாகும்.
எனினுமஇ; இப்பிரச்சினைகள் தொடர்பாகக் கூட்டமைப்பிலுள்ள கட்சிகள் மட்டத்தில் பேச்சுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவை நல்ல முடிவை எட்ட வேண்டும் என்பதே தமிழ் மக்களின் அவா. ஒரு இன ஒடுக்குமுறை அரசின் கீழ் உரிமைதனைப் பெறுவது கல்லில் நார் உரிக்கும் விசயம். இதை சரியாக  முன்னெடுத்துச் செல்ல தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் ஒருமித்த கருத்தும் இரும்பு போன்ற ஐக்கியமும் தேவை. அதன் அடிப்படையிலேயே அடுத்தகட்ட ஐக்கியத்தை உருவாக்க முடியும்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒன்றுதான் தமிழ் மக்களின் உண்மையான தலைமை. இதைப் பலவீனப்படுத்தும் வகையில் தனி ஒரு கட்சிக்கு முதன்மை ஸ்தானம் வழங்க முயன்றால் அது அரசாங்கத்துடன் இணைந்து இயங்கும் டக்ளஸ்இ பிள்ளையான் ஆகியோருக்கு வாய்ப்பை வழங்கியதாகவே முடியும்.
எனவேஇ தமிழினம் தாழ்ந்து போவதா தலை நிமிர்வதாக என்பதைத் தீர்மானிக்கும் பொறுப்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பிடமே உண்டு.
-ஈஸ்வரன்-

No comments:

Post a Comment