Saturday, June 16, 2012

குற்றச்சாட்டுகள் தனக்குப் புதிதல்ல என்று டேவிட் கமருனிடம் கூறினாராம் மகிந்த

லண்டனில் நடத்தப்பட்ட எதிர்ப்புப் போராட்டங்களால், கொமன்வெல்த் பொருளாதார மன்றத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உரை நிறுத்தப்பட்டதற்காக, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவிடம் பிரிதானியப் பிரதமர் டேவிட் கமரூன் வருத்தம் தெரிவித்தாக சிறிலங்கா அதிபரின் செயலர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.


நேற்று ஊடக ஆசிரியர்களுடன் இடம்பெற்ற காலையுணவுச் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“சிறிலங்கா அதிபரை மகாராணியின் வைரவிழா நிகழ்வின் போது, பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் சந்தித்தார்.

அப்போது தனது 42 ஆண்டு கால அரசியல் வாழ்வில் இதுபோன்ற எதிர்ப்புப் போராட்டங்கள், குற்றச்சாட்டுகள் எல்லாம் புதிய அனுபவம் அல்ல என்று டேவிட் கமரூனிடம் சிறிலங்கா அதிபர் கூறினார்.

லண்டனில் சிறிலங்கா அதிபர் தங்கியிருந்த போது ஏழு பிரதான நிகழ்வுகள் ஒழங்கு செய்யப்பட்டிருந்தன.

அவற்றில் கொமன்வெல்த் பொருளாதார மன்ற உரை தவிர்ந்த ஏனையவை எல்லாமே வெற்றிகமாக நடந்து முடிந்தன.

சிறிலங்கா அதிபரின் லண்டன் பயணம் தோல்வி என்று எவரும் கூறமுடியாது.

சிறிலங்கா அதிபர் அனைத்துலக ரீதியாக நடைபெறும் நிகழ்வுகளில் கலந்து கொள்வதை தடுக்க முடியாது என்பது பிரித்தானியப் பயணம் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

புலம்பெயர் தமிழர்களின் அழுத்தங்களுக்கு நாம் பணியப் போவதில்லை.

மகிந்த ராஜபக்சவின் லண்டன் பயணத்தின் மூலம் பிரித்தானியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான உறவுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தப் பயணம் மிகவும் பயனுள்ளதாக இருந்த போதும், துரதிஸ்டவசமாக ஊடகங்கள் அதை வெளியிடவில்லை.“ என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவே மாதாந்தம் ஊடக ஆசிரியர்களை சந்திப்பது வழக்கம்.

ஆனால் நேற்று அவர் கொழும்புக்கு வெளியே இருப்பதாக கூறி சந்திப்பில் பங்கேற்கவில்லை.

எனினும் லண்டன் பயணம் குறித்த கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் தவிர்க்கவே அவர் நேற்றைய சந்திப்பில் இருந்து நழுவிக்கொண்டதாக கூறப்படுகிறது.source:puthinam


No comments:

Post a Comment