Friday, June 22, 2012

சென்னை - மயிலாப்பூரிலுள்ள இலங்கைத் தூதரகம் முன் சம்பிக ரணவக்கவின் கொடும்பாவி எரிப்பு:



தமிழர்கள் இன்னும் நூறு முள்ளிவாய்க்கால் படுகொலைகளைச் சந்திக்க நேரிடும் என்று பேசிய இலங்கை அரசின் இனவெறி அமைச்சர் சாம்பிக ரணவக்கவைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் சார்பாக நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அறிவித்திருந்தார்.
 
அந்த வகையில் இன்று 21-6-2012 வியாழக்கிழமை காலை 10 மணியளவில் சென்னை மயிலாப்பூரிலுள்ள இலங்கைத் தூதரகம் முன், கட்சியின் மாநிலச் செய்தித் தொடர்பாளர் வன்னிஅரசு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 'இந்திய அரசே இலங்கை அமைச்சருக்குக் கண்டனம் தெரிவி! இலங்கைத் தூதரகத்தை தமிழகத்திலிருந்து அப்புறப்படுத்து! இலங்கையைக் கண்டித்து இந்திய நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்று!' ஆகிய முழக்கங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் இலங்கை அமைச்சர் சாம்பிக ரணவக்கவின் கொடும்பாவியும், இலங்கைக் கொடியும் எரிக்கப்பட்டன. மாநில நிர்வாகிகள் உஞ்சைஅரசன், மடிப்பாக்கம் வெற்றிச்செல்வன், இளஞ்சேகுவேரா, வழக்கறிஞர் பழனிமுத்து, எஸ்.எஸ்.பாலாஜி, மாவட்ட நிர்வாகிகள் ஆ.விடுதலைச்செல்வன், இர.செந்தில்குமார் உள்பட 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். பின்னர் அனைவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு திருமண மண்டபம் ஒன்றில் வைக்கப்பட்டுள்ளனர்.




Back to News   Bookmark and Share Seithy.com

No comments:

Post a Comment