இப்போட்டி நெதர்லாந்தைச் சேர்ந்த ஏழு கழகங்களிற்கிடையில் இடம்பெற்றது. நிகழ்வின் ஆரம்பத்தில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு தொடர்ந்து நெதர்லாந்துத் தேசியக் கொடி, தமிழீழத் தேசியக் கொடி என்பன ஏற்றப்பட்டு அகவணக்கத்துடன் போட்டி ஆரம்பமானது. போட்டியினிறுதியில்
Roermond/Amsterdam விளையாட்டுக்கழகம் முதலிடத்தையும் TFC Brabant விளையாட்டுக் கழகம் இரண்டாம் இடத்தையும் Denhelder விளையாட்டுக் கழகம் மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டன.
இவ்வாண்டிற்கான சுழல் கிண்ணத்தை Roermond/Amsterdam விளையாட்டுக்கழகம் தட்டிச் சென்றது. போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பெற்றுக் கொண்ட விளையாட்டுக் கழக வீரர்கள் போட்டி முடிவில் பதக்கம் அணிவித்துக் கௌரவிக்கப்பட்டனர். இச்சுற்றுப் போட்டிகள் சிறப்பான முறையில் இடம்பெற அனைத்துத் தரப்பினரும் பூரண ஒத்துழைப்பு வழங்கினர்.
No comments:
Post a Comment