திருமுறுகண்டி இந்துபுரம் வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள 19
குடும்பங்களும் தங்களை சொந்த இடங்களில் குடிமயர்த்துமாறு வலியுறுத்திய போது
அந்த மக்கள் சார்பில் இராணுவத்தினரிடம் பேசியவர் மீது இராணுவத்தினர்
தாக்குதல் நடத்தியுள்ளனர். இன்று இடம்பெற்ற இச்சம்பவத்தில்
பாதிக்கப்பட்டவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த மூன்று வருடங்களாக வவுனியாவில் நலன்புரி நிலையங்களில்
தங்கவைக்கப்பட்டிருந்த திருமுறிகண்டி மக்கள் நேற்று முன்தினம் சனிக்கிழமை மீள்குடியேறுவதற்காக கொண்டுவரப்பட்டு திருமுறிகண்டி இந்துவித்தியாலயப் பாடசாலையில் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.
நலன்புரி நிலையத்திலிருந்து கொண்டுவரப்பட்ட 46 குடுப்பங்களில் 27 குடுப்பங்களை அவர்களது காணிகளிலேயே குடியேற்றிவிட்டனர்.மீதமாக உள்ள 19 குடும்பங்கள் இன்னமும் திருமுறிகண்டி இந்து வித்தியாலயத்திலேயே தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
திருமுறிகண்டி இந்துபுரம் வித்தியாலயத்தி;ல தங்கவைக்கப்பட்டுள்ள 19 குடுப்பத்தினரையும் அவர்களது காணிகளை வழங்காமல் அதற்கு பதிலாக திருமுறிகண்டியில் இருந்து கிளிநொச்சி செல்லும் ஏ9பாதைக்கு கிழக்கே ஒரு கிலோ மீற்றருக்கு அப்பால் 235மீற்றர் அகலமான நிலப்பரப்பில் கால் ஏக்கர் வீதம் காணி தருவதாகவும் அங்கு சென்று மீள்குடியேறுமாறும் இன்று காலையில் இந்துபுரம் வித்தியாலயத்திற்கு வந்த இராணுவத்தினரும் காவல்துறையினரும் வற்புறுத்தினர்.
இதற்கு அனைவரும் எதிர்ப்பு தெரிவித்தனர். தங்கு தங்கவைக்கப்பட்டிருந்தவர்களில் சிங்கள மொழி தெரிந்த சிவலிங்கம் என்பவர் அந்த மக்களின் சார்பில் இராணுவத்தினருடன் பேசினார். தங்களுடைய காணியை தமக்கு வழங்கினால் மாத்திரமே மீள்குடியேற சம்மதிப்போம் மாறாக வேறு எப்பகுதியிலும் குடியேற தயாராக இல்லை என அவர் தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து இந் நபரை இராணுவத்தினர் தனியாக அழைத்துச் சென்று அடித்து விசாரணை செய்தனர். இவர் ஏற்கனவே இதய நோயினால் பாதிக்கப்பட்டிருந்தமையால் மாரடைப்பு ஏற்பட்டு கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார்

No comments:
Post a Comment