Tuesday, June 26, 2012

இலங்கை உங்களை மதித்ததா? இப்படி ஐ.நாவிடம் கேட்கப்படும்

இலங்கை வறிய நாடாக இருப்பது டன் இந்த நாட்டின் ஆட்சியாளர்களி டம் இருக்கக் கூடிய சிறுமைத்தனங் களும் சேர்ந்து இந்த நாட்டை குட்டிச் சுவராக்கிவிட்டது.முப்பது வருடகால யுத்தம் முடிபுக்கு கொண்டு வரப்பட் டுவிட்டது என்பது இலங்கையில் அமைதியையும் சமாதானத்தையும் ஏற்படுத்துவதாக இருந்திருக்க வேண் டும்.
ஆனால், அதுதான் நடப்பதாக இல் லை. மாறாக யுத்த வெற்றி என்பது சிறுபான்மைத் தமிழ் இனத்தை அட க்கி ஆள்வதாகவே உள்ளது. இந் நிலை நீண்டுநீடிக்கும் என்று யாரே னும் கருதுவார்களாயின் அதுதான் மிகப்பெரும்’ மடமைத்தனமாக இரு க்கும். யுத்தவெற்றி என்பது நிலைத் திருக்க வேண்டுமாயின் எல்லா இன மக்களும் சமஉரிமையுடன் இல ங்கை எமது நாடு என்று உள்ளார்த்த மாக கூறுவதற்கான ஏற்பாட்டை செய்வது அவசியம்.

ஆனால் அது நடக்கப் போவதில்லை. ஏனெனில் ஒரு சிறிய நாடு, உலகின் அமைதியைக் கருதி உருவாக்கப்ப ட்ட ஐ.நா சபையைக் கூட மதிப்பதாக இல்லை.வன்னியில் நடந்த யுத்தத் தின் போதும் அதன் பின்னரும் இல ங்கை ஆட்சியாளர்கள் ஐ.நா விடய த்தில் எங்ஙனம் நடந்து கொள்கின்ற னர் என்பதை கூர்ந்து அவதானித் தால் ஒரு சிறிய நாடு ஐ.நா என்ற உலகப் பொது அமைப்பின் இயங்கு நிலையை கேள்விக்குறியாக்கி விட் டது என்ற உண்மையை உணரமுடி யும்.

வன்னிப் போரின் போது நடந்த போர் க்குற்றங்கள், அது தொடர்பில் ஜெனி வாவில் கொண்டு வரப்பட்டு நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் இவற் றின் மத்தியில் இலங்கை அரசு அசை யாமல் இசையாமல் இருப்பதன் மர் மம் என்ன? என்ற கேள்வியின் மத் தியில் இவையாவற்றுக்கும் இரண்டு காரணங்களையே கண்டறிய முடி யும்.

அதில் ஒன்று, வன்னிப் போரின் போது விடுதலைப் புலிகளை அழிப் பது என்ற விடயத்தில் உறுதியாக நின்ற இந்திய மத்தி அரசு அதற்கு தேவையான அத்தனை உதவிகளை யும் தந்திரோபாயங்களையும் இல ங்கை அரசுக்கு வழங்கியது.இதன் காரணமாக இலங்கையின் சமகாலப் போக்கை கண்டிக்கக் கூடிய தகுதிப் பாட்டை இந்தியா இழந்து போனது.

இப்போது கூட இந்தியப் பிரதிநிதிகள் இலங்கை அரசுடன் பேச்சை நடத்து கின்றனர் ஆயினும் இந்த பேச்சுகளு க்கு இலங்கை அரசு மதிப்புக் கொடுப் பதாக இல்லை.ஆக விடுதலைப் புலி களை அழிக்க வேண்டுமென்று உசார் தந்த இந்தியா இப்போது எதைக் கூறி னாலும் அதற்கான பெறுமானம் இல ங்கை அரசைப் பொறுத்தவரை பூச் சியமாக இருக்கும்.இது தவிர ஐ.நா செயலாளர் பான் கீ மூனும் இலங்கை அரசின் அசமந்தப் போக்கிற்கு கார ணம் என்பதை கூறித்தான் ஆக வேண்டும். ஐ.நாவின் மிக உயர்ந்த பதவியில் இருக்கக் கூடிய பான் கீ மூன் வன்னி யுத்தத்தின் போது பொறுப்பற்ற ஒருவராக நடந்து கொண்டதுடன் இலங்கை அரசு எதைக் கூறினாலும் அதற்கு தலை யாட்டுபவராகவே இருந்தார்.

என்ன காரணத்திற்காக அவர் அப்படி இருந்தார் என்பதை இவ்விடத்தில் தவிர்த்துக் கொண்டாலும் ஐ.நா சபை யை இலங்கை அரசு அவமானப்படு த்து வதற்கும் அலட்சியப்படுத்துவ தற்கும். ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூனும் காரணம் என்பதை மறந்துவிட முடியாது.எதுவாயினும் ஐ.நா சபை இலங்கை அரசுக்கு என்ன செய்துவிட்டது என்பதை என்றோ ஒருநாள் ஏதோ ஒரு நாடு கேட்கும் என்பது மட்டும் உண்மை. அப்போது தான் ஐ.நா சபையின் பலவீனம் உண ரப்படும்.

No comments:

Post a Comment