இங்கிலாந்து அரசியார் தனது வைர
விழா கொண்டட்டத்திற்கு ராஜபக்சேவை அழைத்திருப்பது, உலகெங்குமுள்ள ஈழ
தமிழர்களின் தொடர் எதிர்ப்பை எதிர்நோக்கி வருகிறது.
"லண்டனில் வசிக்கும் சிங்களர்கள்
ராஜபக்சேவை வரவேற்பதில் தமிழர்களுக்கு எந்த மன வருத்தமும் இல்லை. சிங்களம்
தனக்குறிய அங்கீகாரத்தை பெற எல்லா உரிமைகளும் உண்டு. அதோடு, அது எல்லா
வழிகளிலும் தெளிவானதாக எடுத்துரைத்தல் அவசியம். ஆனால், தற்போது எங்களின்
பிரச்சனை என்னவெனில் இலங்கை தீவில் இரு இனத்தவர் வாழ்கின்றனர் என்பதை IC
மற்றும் இந்தியா ஏற்க மறுப்பதுதான்.." என கருத்துரைத்துள்ளார் தமிழ்
அரசியல் பார்வையாளர் ஒருவர்.
ராஜபக்சே லண்டனுள் அனுமதிக்கப்பட
கூடாதென தங்களின் எதிர்ப்பை தெரிவிக்க பல நூற்றுக்கணக்கான ஈழ தமிழர்கள்
ஞாயிற்றுக்கிழமை அன்று, லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தின் நான்காம்
தெர்மினலில் கூடியுள்ளனர்.
மேலும், கிடைக்கப்பெற்ற பிற ஊடக
தகவல் ராஜபக்சே இலங்கை ஏர்வேஸ் விமானம் மூலம் ஞாயிறு இரவன்றே லண்டன்
வந்துவிடுவார் என ஆர்ப்பாட்டக்காரர்களை திசைத் திருப்ப வேண்டுமென்றே
அறிவித்துள்ளது. ஆனால், ராஜபக்சே லண்டன் வந்திறங்கியது திங்கட்கிழமை
காலையில் தான் என தமிழ் ஆர்வலர்களின் மூலங்கள் தெரிவித்துள்ளன.
பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த
நூற்றுக்கணக்கான ஈழ தமிழர்கள் ராஜபக்சே தங்கியிருந்த லண்டன், பார்க் லேன்
ஹில்டன் விடுதி வெளியே ஒன்றுதிரண்டு, சுமார் ஆறு மணி நேர அளவில் எதிர்ப்பு
போராட்டத்தை நடத்தியுள்ளனர்.
மேலும், ஒன்று திரண்ட ஈழ மக்கள்
ராஜபக்சேவை 'இனப்படுகொலையன்' என சாடி ராஜபக்சேவை கைது செய்யும்படி
பிரிட்டன் அரசாங்கத்திடம் வேண்டியுள்ளனர்.
இது இவ்வாறிருக்க, சிங்கள கொடிகளை
ஏந்திய சிங்களர்களும் ஈழ தமிழர்களுக்கு எதிராக தங்களின் அதிபருக்கு ஆதரவு
தெரிவிக்கும் வண்ணம் திரண்டுள்ளனர்.
ராஜபக்சேவை எதிர்க்கும் நோக்கில்,
ராஜபக்சேவின் நிகழ்ச்சி அனைத்திற்கும் தொடர் எதிர்ப்பை தெரிவிக்க
எதிர்ப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர். குறிப்பாக, காமன்வெல்த் வர்த்தக
மன்றத்தின் ஏற்பாட்டில் ஜூன் 6 அன்று, மேன்சன் ஹவுஸில் நடக்கயிருக்கும்
காமன்வெல்த் பொருளாதார கூட்டத்தில் அவரது சிறப்பு நிகழ்ச்சியிலும் மால்பாரோ
ஹவுஸ், காமன்வெல்த் செயலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் அதிகாரத்துவ
மதிய உணவு உபசரிப்பின் போதும் எதிர்ப்பை தெரிவிக்க திட்டமிட்டுள்ளனர்.
பிரிட்டன் அரசியாரின் ஆண்டுவிழாவில்
ராஜபக்சே கலந்துகொள்ளவிருப்பதை உலக தமிழர்களும் காமன்வெல்த் தமிழர்களும்
ஒன்று கூடும் கருவியமாக பயன்படுத்தி IC-யும் காமன்வெல்த்தும் தமிழர்களின்
கேள்விகளுக்காக செயல்படவில்லை; பதிலளிக்கவில்லை என்பதனை சுட்டிக்காட்ட
வேண்டும். அரசியார் பிரிட்டனுக்கு மட்டும் தலைமை வகிக்கவில்லை. கனடா,
ஆஸ்திரோலியா மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகளுக்கும் அவர்தான் அரசி என
கூறியுள்ளார் லண்டனை சேர்ந்த மூத்த அரசியல் பார்வையாளர் ஒருவர்.
நன்றி. தமிழ் நெற்.
மொழிபெயற்பு,
வெற்றிக்குமரன் தமிழரசி
No comments:
Post a Comment