Tuesday, June 26, 2012

எங்களுக்கு எங்கட காணி நிலமே வேண்டும் : வன்னியில் இருந்து கதறியழும் தாயின்குரல் !

june-26எங்களுக்கு எங்கட காணி நிலம் வேண்டுமென, வன்னியில் இருந்து ஒலித்திருக்கும் தாயொருவரின் குரல், சிங்கள அரசினால் தமிழர் தாயகத்தில் அபகரிக்கப்படும் நிலங்களது வலியினை வெளிப்படுத்தி நிற்கின்றது.
தமிழர்களுடைய தாயகக் கோட்பாட்டினை பலவீனப்படுத்தும் வகையில், சிங்கள அரசினால் மேற்கொள்ளப்படும் நில அபகரிப்புக்கு எதிரான மக்கள் போராட்டமொன்று நாளை செவ்வாய்கிழமை திருமுறிகண்டியில் இடம்பெறுகின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட பல கட்சிகள் ஒன்றிணைந்து இந்தப் போராட்டத்தினை மேற்கொள்ளும் நிலையில், புலம்பெயர் நாடுகளிலும் இப்போராட்டத்திற்கு சமாந்திரமாக, நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் கவனயீர்ப்பு போராட்டங்களை முன்னெடுக்கின்றது.
இந்நிலையில், எங்களுக்கு எங்கட காணி நிலவே வேண்டுமென, திருமுறிகண்டி மக்கள் போராடிவருகின்றனர்.
சிறிலங்கா இராணுவத்தினர், தாம் வழங்கும் இடத்தில் மக்களை சென்று குடியமருமாறு மக்களை நிர்பந்தித்து வருகின்றனர் என்ற தாயொருவர் தெரிவித்துள்ளார்.
தொடர்சியாக, நாளாந்தம் பலதடவை சிறிலங்கா இராணுவத்தினரின் பல்வேறு தரப்பினரும் தங்களைத் தேடிவந்து, அச்சுறுத்தி வருவதாக அந்த தாய் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா இராணுவத்தினரின் இந்த அச்சுறுத்தல்களால், சிவலிங்கம் என்பவர் மாரடைப்பால் மயங்கி விழுந்த நிலையில்  கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதுஇவ்வாறிருக்க, சுயநிர்ணய உரித்துக்குரிய தமிழர்களின் அரசியல் தீர்வுக்கு வேட்டுவைக்கும் வகையிலேயே, சிங்கள அரசாங்கம் இந்த நில அபகரிப்பினை மேற்கொண்டு வருவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதி மாவை சேனாதிராஜா அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழர்களின் நிலப்பிரதேசங்கள் மட்டுமல்ல, தமிழர்களின் வாழ்வாதார வளங்களான மீன்பிடிப் கடற்பிரதேசமும், சிங்களவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
தமிழர்கள் நிலங்களை இழந்து வருவது மட்டுமல்லாது, தங்களது வாழ்வாதார வளங்களையும் இழந்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில் இராணுவத்தினர் நிலங்ளை அபகரித்து இராணுவக்குடும்பங்களை குயேற்றுவது ஒருபுறமிருக்கு, நிலங்களை ஆக்கிரமிக்கும் சிங்கள பௌத்த பிக்குகள் அங்கு புத்தர் சிலைகளை நிறுவதோடு சிங்களவர்களை குடியேற்றி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இத்தகைய சூழலில் இதற்கு எதிரான போராட்டங்களை நடத்த வேண்டிய கட்டயாம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள மாவை சேனாதிராஜா அவர்கள், தாயகத்தில் மட்டுமல்ல  புலம்பெயர் நாடுகளிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவது அவசியமெனத் தெரிவித்துள்ளார்.
தாயகத்தில் இருந்து இவ்வாறான கருத்து முன்வைக்கப்பட்டிருக்க, புலம்பெயர் தமிழர்களின் சனநாயகப் போராட்ட வடிவமாகவுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதி தணிகாசலம் தயாபரன் அவர்கள் தெரிவிக்கையில், தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கபடும் போராட்டங்களுக்கு சமாந்திரமாக, தொடர்சியான போராட்டங்களை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுக்குமென அவர் தெரிவித்துள்ளார்.
அந்தவகையில் யூன் 26ம் நாள் தமிழர் தாயகத்தின் திருமுறிகண்டியில் முன்னெடுக்கப்படும் மக்கள் போராட்டத்திற்கு வலவூட்ட, உலகத் தமிழர் தேசங்களிலும் அதே நாளில் கவனயீர்ப்பு போhராட்டம் முன்னெடுக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment