Tuesday, June 26, 2012

மன்னார் எருவிட்டான் கிராம மக்கள் கடந்த 15 வருடங்களாக அகதி வாழ்வு:செல்வம்


selvam-adaikalanathan_3மன்னார் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட எருவிட்டான் கிராமத்தில் மீள் குடியேறிய நிலையில் வாழ்ந்து வரும் மக்கள் கடந்த 15 வருடங்களாக எவ்வித வாழ்வாதார உதவிகளுமற்ற நிலையில் அனைவராலும் கைவிடப்பட்ட நிலையில் வாழ்ந்து வருவதாகக் குறித்த கிராம மக்கள் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனிடம் முறையிட்டுள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில் அக்கிராம மக்கள் தமது கோரிக்கை அடங்கிய கடிதம் ஒன்றைப் பாராளுமன்ற உறுப்பினருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
மன்னார் மாவட்டம் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட இராச மடு கிராம சேவகர் பிரிவில் அமைந்துள்ள எருவிட்டான் கிராமத்தில் கடந்த 1996 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையினால் உள்நாட்டில் இடம் பெயர்ந்து அயல் மாவட்டமான மன்னாரில் வாழ்ந்து வந்த எமக்கு இன்று வரை எவ்விதமான காணிகளும் இல்லை.அரசாங்கத்தினாலும்; தரவுமில்லை.
அரச அதிகாரிகள் கவணக்குரைவாகவும்,அக்கறையின்மையுமாக உள்ளனர்.அரச அதிகாரிகளிடம் எந்த வெரு உதவி கேட்டுப்போனாலும் நீங்கள் இடம் பெயர்ந்தவர்கள் என்றும்,தரம் குறைவானவர்கள் என்றும் பேசுகின்றார்கள்.
-தற்போது நாங்கள் அகதி வாழ்க்கையை 15 வருடங்களாக அனுபவித்து விட்டோம். நாங்கள் தற்போது இடம் பெயர்ந்து இந்தியாவிற்குச் சென்றவர்களுடைய காணிகளிலும், வீடுகளிலும் வாழ்ந்து வருகின்றோம்.
சுமார் 15 குடும்பங்களைச் சேர்ந்த 50 பேர் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளோம்.எமக்கு மின்சார வசதி இல்லை .தற்போது எம்மை அதிகாரிகள் யாழ்ப்பாணத்தவர்கள் அல்லது இடம் பெயர்ந்தவர்கள் என தினம் தினம் அழைக்கின்றனர்.
இலங்கையில் இது வரை சொந்தக்காணி எதுவும் அற்ற நிலையில் உள்நாட்டு யுத்தத்தின் காரணமாக இடம் பெயர்ந்து பாதிக்கப்பட்டுள்ள எமக்கு இதுவரை எவரும் எந்த உதவிகளையும் மேற்கொள்ளவில்லை.
எனவே கருணை கூர்ந்து உங்கள்முன் வைத்திருக்கும் இந்தக் கருணை மனுவில் கூறிய நியாயமான பதிலை எமக்கு சம்பந்தப்பட்டவர்களுடன் தொடர்பு கொண்டு பெற்றுத்தருவதோடு எமக்கு இந்த நாட்டின் பிரஜை என்ற உரிமையையும் பெற்றுத்தருமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளுகின்றேம் எனக் குறிப்பிட்டு குறித்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள் அனைவரும் கையொப்பமிட்டு தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. க்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment