Tuesday, June 26, 2012

போரில் கணவனை இழந்த இலங்கை பெண்களுக்கு மலேசியா நிதியுதவி.

  இலங்கையின் வடக்கு கிழக்கில் போரின் போது கணவன்மாரை இழந்த பெண்களுக்கு உதவும் முகமாக மலேசிய அரசாங்கம் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது. இந்த நிதி, மலேசிய தமிழ்ப் பேரவையிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இந்த நிதி வடக்கு, கிழக்கில் கணவன்மாரை இழந்த 1700 பெண்களுக்கான வாழ்வாதார திட்டங்களுக்கு வழங்கப்படவுள்ளதாக நியூ ஸ்ரெய்ட் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

மலேசியாவின் எல்லைகள் துறை பிரதி அமைச்சர் எம்.சரவணன் இந்த நிதியை நேற்று கையளித்தார். இது சிறிய தொகை நிதியாக இருந்தாலும் சிறந்த ஆரம்பம் என்று நிகழ்வின்போது அவர் குறிப்பிட்டார்.
நிகழ்வில் உரையாற்றிய மலேசிய தமிழ்ப் பேரவையின் பணிப்பாளர்களில் ஒருவரான எஸ்.பி பதி, இலங்கையின் வடக்கு கிழக்கில் தேர்ந்தெடுக்கப்பட்ட 1700 பெண்களின் சிறிய பொருளதார முயற்சிகளுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படும் என்று குறிப்பிட்டார்.
இதேவேளை இந்ததிட்டத்தை முன்னெடுத்து செல்லும் வகையில் ஐக்கிய நாடுகள் மற்றும் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட மலேசிய அரசாங்கம், தொண்டர்களையும் அனுப்பி வைக்கவுள்ளதாக பிரதியமைச்சர் சரவணன் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment