Tuesday, June 26, 2012

தமிழர்கள் மீதான இனப்படுகொலைக்கு எதிராக ஜேர்மனியில் அரசியல் வேலைத்திட்டங்கள்.

சிங்கள இனவெறி அரசால் தமிழீழத்தில் சிங்கள மயமாக்கல், நிலஅபகரிப்பு, தொடரும் இனப்படுகொலை மற்றும் மன்னார் ஆயருக்கு விடுக்கப்படிருக்கும் கொலை அச்சுறுத்தலை சுட்டிக்காட்டி ஜேர்மனி Bonn நகரில் அரசியல் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
நேற்று Bonn நகரத்தில் நடைபெற்ற சர்வதேச சமூகமும், மனித உரிமைகளை காக்க வேண்டிய அதன் கடமைகளும் எனும் தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில், பல்வேறு சர்வதேச மனிதவுரிமை
அமைப்புக்கள் மற்றும் இனப்படுகொலைக்கு எதிரான அமைப்புகளும் கலந்துகொண்டன.
இந்நிகழ்வில் ஜேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை சார்பாக மத்திய மாநில பேச்சாளர் செல்வன் கோகுலனும் கலந்துகொண்டார். நடைபெற்ற நிகழ்வை Bonn நகர மேயர் Angelica Maria Kappel சிறப்பு வாழ்த்துரையோடு ஆரம்பித்துவைத்தார். அதை தொடர்ந்து பேராசிரியர் Christian Tams, LL.M. (University of Glasgow) சர்வதேச சமூகமும், மனித உரிமைகளை காக்க வேண்டிய அதன் கடமைகளின் கோட்பாட்டை பற்றி விளக்கமளித்தார்.
மனிதவுரிமை மற்றும் இனப்படுகொலைக்கு எதிரான அமைப்பை சார்ந்த Schutte, சர்வதேச சமூகம் மனித உரிமைகளை காக்க வேண்டிய அதன் கடமைகளை நடைமுறைப்படுத்தும் பொழுது ஏற்படும் சிரமங்களும் அதை எதிர்கொள்ளும் வகையில் ஏற்படும் தடைகளை பற்றியும் எடுத்துரைத்தார்.
தொடர்ந்து நடைபெற்ற கலந்துரையாடலில் தமிழ் மக்கள் மீது சிங்கள இனவாத அரசு நடத்தும் இனப்படுகொலை பற்றி கலந்துரையாடப்பட்டது. சிறப்பாக 2006 - 2009 காலப்பகுதியில் ஒன்றரை லட்சத்துக்கும் மேலான மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள் என்றும் தொடர்ந்து தமிழ் மக்கள் மீது இனவழிப்பு சிங்கள மயமாக்கல், நிலஅபகரிப்பு நடந்துகொண்டிருக்கிறது எனவும் இதற்கு எதிராக குரல் கொடுத்து வரும் மன்னார் ஆயர் மற்றும் சிவில் சமூகத்தினருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருகின்றது என இவ் நிகழ்வில் செல்வன் கோகுலனால் எடுத்துரைக்கப்பட்டது.
லிபியா மற்றும் சிரியா போர்குற்றவாளிகளின் மீது தொடர்ந்து அழுத்தம் கொடுத்துவரும் சர்வதேச சமூகம் தமிழின படுகொலைவாதி ராஜபக்சாவை விருந்தினராக அழைப்பது ஏன் என்ற கேள்வியும் சபையில் எழுப்பபட்டது.
இதற்கு பதிலளித்த பேராசிரியர் Tams மற்றும் இனப்படுகொலைக்கு எதிரான அமைப்பை சார்ந்த Sch�tte தமிழ் மக்கள் மீது நடந்துகொண்டிருக்கும் இனவழிப்பு என்பது இனப்படுகொலையில் இருந்து மக்களை பாதுகாக்கும் பொறுப்பில் இருந்து சர்வதேச சமூகம் தவறியதற்கான மிக சிறந்த உதாரணம் என்றும் மிக விரைவில் சர்வதேச சமூகம் இலங்கை விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்.
இந்நிகழ்வை ஒழுங்கு செய்த ஐ.நாவின் உபமைப்பு மற்றும் இனப்படுகொலைக்கு எதிரான அமைப்பு பொறுப்பாளர்களிடம் தமிழர்களின் நிலஅபகரிப்பு விடையமாக ஆவணங்களும் மனு ஒன்றும் கையளிக்கப்பட்டது.





Back to News   Bookmark and Share Seithy.com

No comments:

Post a Comment