எந்தவித மாற்றங்களும் இன்றி திட்டமிட்டபடி நாளை காலை 8:00 (06.06.2012)
மணிக்கு முன்னர் இலண்டன் மான்சன் கவுசுக்கு முன்னால் ஒழுங்கு
செய்யப்பட்டிருந்த அந்த ஆர்ப்பாட்டப் பேரணி நடைபெறும் என்பதை எமது
மக்களுக்கு அறியத்தருகின்றோம்.
நாளைய நாள் பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் அந்தந்த நாட்டு ஊடகவியலாளர்கள் எனப் பலரும் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக வரும்வேளை, 1,50,000 இற்கும் மேற்பட்ட எங்கள் இரத்த உறவுகளை இனவழிப்புச் செய்த போர்க்குற்றவாளியான சிறீலங்கா ஜனாதி மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக மாபெரும் ஆர்ப்பாட்டத்தைச் செய்யவேண்டிய ஒரு வரலாற்றுக் கட்டாயம் புலம்பெயர் மக்களாகிய எமக்கு உள்ளது.
அந்தவகையில் அந்த ஆர்ப்பாட்டங்களில் பங்கெடுப்பதற்காக ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் இலண்டன் மான்சன் கவுஸ் நோக்கி தற்போது புறப்பட்டவண்ணம் உள்ளார்கள்.
எனவே, இன்றைய வரலாற்றுக் கட்டாயத்தை உணர்ந்து அனைத்து பிரித்தானிய வாழ் உறவுகளும் இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் பங்கெடுத்துக்கொள்ளுமாறு மீண்டும் மீண்டும் அன்புடனும் உரிமையுடனும் வேண்டிக்கொள்கிறோம்.
இலண்டன் மான்சன் கவுசுக்கு முன்னால் நடைபெற இருக்கும் ஆர்ப்பாட்டப் பேரணிகுறித்து ஒருங்கிணைப்புக் குழுவினரின் விரிவான உத்தியோகபூர்வ அறிவித்தல் இன்னும் சில மணி நேரங்களில் தரப்படும்.
No comments:
Post a Comment