Tuesday, June 26, 2012

சரணடையும் தமது எதிரிகளை சாதாரண பொதுமக்கள் போல் நடாத்தப்படும் பண்பு ஏனைய உலக நாடுகளில் காணப்படுகின்றது.
ஆனால் சிறிலங்காவில் அவ்வாறானதொரு மனிதப் பண்பு காணப்படவில்லை. இவ்வாறு Salem-News.com இணையத்தின் செய்தியாளர் Tim King எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதன் மொழியாக்கம்.
சிறிலங்காவில் நடந்தேறிய யுத்த மீறல்களை ஆதாரப்படுத்தும் மேலும் பல சாட்சியங்கள் வெளிவந்துள்ளன. இங்கு வெளியிடப்பட்டுள்ள ஒளிப்படங்களும் அவை தொடர்பான தகவல்களும் உண்மையில் அதிர்ச்சி தரக்கூடிய துன்பியல் சம்பவங்களாக காணப்படுகின்றன.
இவ்வாறான துன்பகரமான சம்பவங்கள் ஒவ்வொருவரதும் மனங்களில் ஆழமான அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. இந்த மக்களுக்கு ஏற்பட்ட அநீதி தொடர்பில் குரல் கொடுக்கும் மக்களை வழிநடத்துகின்ற, தூண்டுகின்ற ஆதாரங்களாக இவ் ஒளிப்படங்கள் உள்ளன என்பது உண்மையாகும்.

படுகொலைகளைச் சந்தித்த மக்களை அவற்றிலிருந்து மீட்டெடுத்து சரியான இடத்துக்கு கொண்டு செல்வதற்கு இவ்வாறான மிகப் பரந்தளவிலான அர்ப்பணிப்பும், ஈடுபாடும் தேவைப்படுகின்றன. மரணம் மற்றும் படுகொலை போன்றவை தொடர்பாகவும், புலம்பெயர் தமிழ் சமூகத்தவர்களின் மத்தியில் இவற்றை எதிர்த்து, நம்பிக்கையுடன் குரல் கொடுக்க முன்வந்துள்ள புதியவர்களைப் பற்றியும் இங்கு குறிப்பிடப்படுகின்றது.

சிறிலங்காவின் வடக்கில் வாழ்ந்த இந்து மற்றும் கிறீஸ்தவ மதங்களைச் சேர்ந்த தமிழ் மக்கள் 2009ல் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட யுத்தமானது தீவிரம் பெற்ற மாதங்களில், சிறிலங்கா இராணுவத்தால் ஈவிரக்கமற்ற முறையில் கொடுமைப்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.

இதில் 40,000 வரையான பொதுமக்கள் கொல்லப்பட்டதாக சிலர் கூறுகின்றனர். ஆனால் கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை இதைவிட அதிகம் என ஏனையோர் கூறுகின்றனர். சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்தமானது நிறைவுற்றபோது 160,000 வரையான தமிழ் மக்கள் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொல்லப்பட்ட மக்களைக் காண்பிக்கின்ற ஒளிப்படங்கள் பார்ப்பதற்கு மிக வேதனையைத் தருகின்றன. இந்த மக்கள் எவ்வாறான துன்பங்களைச் சந்தித்திருப்பார்கள் என்பதையும் இதனால் ஏற்பட்ட உணர்வு ரீதியான வடுக்களையும் நாங்கள் கற்பனை செய்து பார்க்க மட்டுமே முடியும்.

சிறிலங்கா இராணுவத்துக்கும் புலிகள் அமைப்புக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட யுத்த நிறுத்த உடன்படிக்கையானது நடைமுறையில் இருக்கும் போதே, சிறிலங்காவின் வடக்கில் இராணுவத் தாக்குதல்கள் நடைபெற்றன என்பது உண்மையில் சிறிலங்கா அரசாங்கத்தின் கோரமுகத்தைக் எடுத்துக் காட்டுகின்றது.

யுத்தத்தின் காரணமாக சொந்த இடங்களை விட்டு இடம்பெயர்ந்த மக்கள் மீண்டும் தமது இடங்களுக்குச் செல்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 1940களின் பிற்பகுதியில் ஐக்கிய நாடுகள் சபையால் உருவாக்கப்பட்ட அனைத்துலக மனித உரிமைப் பிரகடனத்தை ஏற்றுக் கொண்டுள்ள சிறிலங்காவானது, தமது சொந்த இடங்களுக்கு திரும்பிச் செல்வதற்கு மக்களுக்கு உரிமை உண்டு எனக் குறிப்பிடப்படும் சரத்தை மீறியுள்ளது.

தற்போது சிறிலங்கா அதிபராக உள்ள மகிந்த ராஜபக்ச முதன் முதலாக 2005ல் இடம்பெற்ற தேர்தல் மூலம் அதிபராக பதவியேற்றதிலிருந்து, தமிழ் மக்களை அழிப்பதற்கான முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டன.

ஜோர்ஜ் W. புஷ் மற்றும் ரொனி பிளேயர் ஆகியோரின் உதவியுடன் சிறிலங்கா அரசியலைத் தீர்மானித்த சக்திகள் நாட்டில் இராணுவ எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொண்டன. அத்துடன், தமிழீழத்தின் அரசியல் தலைமைத்துவத்தை பயங்கரவாதிகள் எனவும் அழைத்ததுடன், இவர்களை அழிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டனர்.

'
பயங்கரவாத' முத்திரை குத்தப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள், உலக அரசியல் அரங்கில் தமிழ் மக்களுக்காக நியாயம் கோரி, பேரம் பேசுவதற்கான தகைமையை இழந்தனர். இது முடிவின் ஆரம்பமாக காணப்பட்டது.

சிறிலங்காவின் வடக்கில் நிலைகொண்டிருந்த படைகள் அங்கிருந்த தமிழ் மக்கள் மீது குறிப்பாக பெண்கள் மற்றும் சிறுவர்களை இலக்கு வைத்து தமது ஆக்கிரமிப்பை மேற்கொண்டனர்.

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது அரங்கேற்றப்பட்ட பல்வேறு யுத்த கால மீறல்கள் அனைத்துலகத்தின் கவனத்தை ஈர்த்தன. இந்நிலையில் பல்வேறு புதிய யுத்தக் குற்ற ஆதாரங்கள் வெளிவரத் தொடங்கின.

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது சிறிலங்கா இராணுவத்திடம் சரணடைந்த தமிழ்ப் புலி உறுப்பினர்கள் பலர் பேரூந்து ஒன்றில், கைகள் விலங்கிடப்பட்டு, பேருந்து ஆசனங்களில் இரும்புச் சங்கிலிகளால் இறுகப்பிணைக்கப்பட்டவாறு கொண்டு செல்லப்படுகின்ற காட்சிகளைக் கொண்ட புதிய ஆதாரம் தற்போது வெளிவந்துள்ளது.

அவர்களது முகங்கள் வெளிறிக் காணப்பட்டன. சோகம் அவர்களை ஆட்கொண்டிருந்தது. அவர்கள் மிக மிக இளையவர்களாகக் காணப்படுகின்றனர். தமக்கு என்ன நடக்கப் போகின்றது என்பதை உணர்ந்ததை அவர்களது முகங்கள் காட்டுகின்றன.

'
பயங்கரவாதிகள்' என சிங்களவர்களால் முத்திரை குத்தப்பட்ட தாம் சாதாரண மக்களைப் போல நடத்தப்படமாட்டோம் என்பதை அவர்கள் நன்கறிந்திருந்தார்கள்.

இப் புலி உறுப்பினர்கள் உயிருடன் இருக்கும் போது எடுக்கப்பட்ட கானொலி ஆதாரங்களும் சில உள்ளன. இவர்களில் பலர் மிக மோசமான காயத்துக்கு உட்பட்டிருந்தனர் என்பதை இவ் ஆதாரங்களின் மூலம் அறியமுடிகிறது. பாதிக்கப்பட்ட புலி உறுப்பினர்களுள் மற்றும் சரணடைந்த புலி உறுப்பினர்களுள் இவர்களில் எவராவது உள்ளனரா என்பதை அடையாளங்காண முயற்சிக்கிறோம். இவர்களில் எவராவது உயிருடனிருந்தால் இப்போர்க்குற்றத்துக்கு சாட்சியமாக இருப்பார்கள்.

கைதுசெய்யப்பட்ட இப்புலி உறுப்பினர்கள் தொடர்பாக நீங்கள் யாராவது தகவலைப் பெற்றால் எம்முடன் தொடர்புகொள்ளவும். தங்களிடமிருந்து பெறப்படும் தகவல்கள் எப்போதும் பாதுகாக்கப்படுவதுடன், பிரசுரிக்கப்படமாட்டாது. தாங்கள் தருகின்ற தகவல்கள் இந்த அடையாளங்களை உறுதிப்படுத்துவதற்கும், தனிப்பட்டவர்களின் நிலைப்பாடுகளை அறிவதற்கும் பேருதவியாக அமையும் என நாம் நம்புகிறோம். அத்துடன் இவர்கள் தொடர்பான மிகச் சரியான தகவல்களை அவர்களது உறவுகளுக்கு தெரியப்படுத்துவதே எமது நோக்காகும்.

கொல்லப்பட்டு நிரையாக காணப்படும் புலி உறுப்பினர்கள், புலிச் சீருடையை அணிந்திருக்கிறார்கள் என்பதை இங்கு காட்டப்பட்டுள்ள சில ஒளிப்படங்கள் மூலம் அறியமுடிகின்றது. சிறிலங்கா இராணுவத்தால் எடுக்கப்பட்ட இவ்வாறான ஒளிப்படங்களும், கானொலிகளும் தற்போது சிறிலங்கா அரசாங்கத்தால் தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட யுத்தக் குற்றங்களுக்கு ஆதாரங்களாக அமைந்துள்ளன.

இக் கானொலி மற்றும் ஒளிப்படங்களில், தமிழ்ப் பெண்கள் சிலர் கொல்லப்பட்டு, நிர்வாணமாக கிடக்கும் காட்சிகளும் உள்ளன. இவர்கள் மேலாடைகள் எதுவுமின்றியும் அல்லது இவர்களது மார்பகங்கள் தெரியும் படியாக இவர்களது மேலாடைகள் கிழிக்கப்பட்டும் காணப்படுகின்றன. அவர்களது உள்ளாடைகள் அகற்றப்பட்டுள்ளன. பெரும் எண்ணிக்கையான தமிழ்ப் பெண்கள், சிறிலங்கா இராணுவ வீரர்களால் சித்திரவதைப்படுத்தப்பட்டுள்ளனர் என்பது மிக வேதனையைத் தருகின்றது.

சரணடைந்த பெண் புலி உறுப்பினர்களின் உடலங்களை சிறிலங்கா இராணுவ வீரர்கள் பாலியல் ரீதியான சித்திரவதைகளுக்கு உட்படுத்துவதை முன்னர் வெளிவந்த கானொலிகள் மூலம் அறியமுடிந்தது. இது சிறிலங்கா இராணுவத்தின் இரக்கமற்ற, காடைத்தனமான செயலைக் காண்பிக்கின்றது. சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்தத்துக்கும், ஏனைய உலக நாடுகளில் இடம்பெற்ற மோதல்களுக்கும் இடையில் சிறியதொரு வேறுபாடு காணப்படுகின்றது. சரணடையும் தமது எதிரிகளை சாதாரண பொதுமக்கள் போல் நடாத்தப்படும் பண்பு ஏனைய உலக நாடுகளில் காணப்படுகின்றது. ஆனால் சிறிலங்காவில் அவ்வாறானதொரு மனிதப் பண்பு காணப்படவில்லை.

இவ்வாறான சம்பவங்கள் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இரு தரப்பு மக்களையும் அதிர்ச்சி கொள்ள வைத்துள்ளன. இவர்களின் மனங்களில் ஆழப்பதிந்துள்ள வடுக்களை ஆற்றி அவர்களை இயல்புநிலைக்கு கொண்டுவருவதென்பது மிகக் கடினமான பணியாகும். இவ்வாறான மீறல்கள் சட்ட நடைமுறைகளின் மீதான நம்பிக்கையை குழிதோண்டிப் புதைத்துள்ளதுடன், மனித உரிமைச் சட்டங்களைப் பயனற்றதாக்கியுள்ளது. இதனாலேயே சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்தக் குற்றவாளிகள் இன்னமும் தண்டிக்கப்படவில்லை. மனிதாபிமான அல்லது சட்ட நடைமுறையை பின்பற்றுவதற்கு தான் தகுதியற்ற நாடு என்பதை சிறிலங்கா அரசாங்கமானது அனைத்துலகத்துக்கும் நிரூபித்துள்ளது. சிறிலங்கா அதிபர் ராஜபக்சவும், அவரது சகோதரர்களும் நாட்டை எவ்வாறு ஆள்கின்றனர் என்பது தொடர்பாக மிக நேர்மையுடன் கருத்துக்களை வெளியிட்ட ஊடகவியலாளர்கள் பலர் சிறிலங்காவை விட்டுவெளியேற்றப்பட்ட சம்பவங்கள் பல நடந்தேறியுள்ளன. சிறிலங்காவில் இவ்வாறான பல்வேறு மீறல்கள் தொடர்ந்த வண்ணமேயுள்ளன. இவை இன்னமும் முடிவுக்கு வரவில்லை.

சிறிலங்காவில் வாழும் பௌத்த சிங்களவர்கள் தமிழ் மக்களை அதிகம் வெறுத்துள்ளனர் என்பதும், தமிழ் மக்களும் சிங்கள மக்களை வெறுத்துள்ளனர் என்பதும் கவலைக்குரிய உண்மையாகும். மிக அழகிய சிறிலங்காத் தீவில், இவ்வாறான இரு சமூகத்தவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட வெறுப்பானது உண்மையில் இங்கு பல துன்பியல் சம்பவங்கள் அரங்கேற வழிவகுத்தது. இரு சமூகத்தவர்களினதும் கலாசாரங்கள் வரலாற்று தொன்மையான பல சம்பவங்களைக் கொண்டுள்ளன. இவ்விரு சாராரும் சிறிலங்காத் தீவில் மிக அமைதியாக வாழமுடியாது என்பதற்கு எவ்வித காரணங்களும் இல்லை. சிறிலங்காத் தீவை தனித்த சிங்கள தேசமாக மாற்ற வேண்டும் என்கின்ற தீவிர முயற்சியின் பயனாக சிங்களவர்கள் இவ்வாறான குருதிதோய்ந்த படுகொலைகளை மேற்கொள்கின்ற கொலையாளிகளாக மாற்றப்பட்டுள்ளனர்.

ஆனால் சிறிலங்கா தேசியவாதிகள் இதனை அடியோடு மறுக்கின்றனர். சிறிலங்கா அரசாங்கமானது தனது நாட்டில் அரச பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளது என்பது உண்மையாகும். இதனால் பல பத்தாயிரக்கணக்கான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளன. சமமான மனித உரிமையை ஆதரித்த பல சிங்களவர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.

1940
களின் பிற்பகுதியில் சிறிலங்காத் தீவானது ஆங்கிலேய கொலனித்துவத்திலிருந்து சுதந்திரத்தைப் பெற்ற காலத்திலிருந்து, தமிழ் மக்களின் கலாசார அடையாளங்களை அழிப்பதற்காக சிங்கள ஆட்சியாளர்கள் பல்வேறு உத்தியோகபூர்வ நடவடிக்கைகளை எடுத்தனர் என்பதற்கு எடுத்துக்காட்டுக்கள் உள்ளன. இதன் மூலம் தமிழீழம் என்கின்ற தனித்தாய்நாட்டுக் கோட்பாடு உருவாக வழிபிறந்தது.

1983
யூலையில் கறுப்பு யூலைக் கலவரம் இடம்பெற்றது. இதில் பௌத்த, சிங்களக் காடையர்கள் பல ஆயிரக்கணக்கான தமிழ் மக்களைக் கொடுமைப்படுத்தி, கற்பழித்து, படுகொலை செய்தனர். தமிழ் மக்கள் என்ற காரணத்தினால் மட்டும் இவர்கள் அழிக்கப்பட்டனர். தமிழ் மக்களின் வீடுகள், கடைகள் என்பன எரித்து நாசமாக்கப்பட்டன. இதனால் புலிகள் அமைப்பு சிறிலங்கா இராணுவத்தை யுத்த களங்களில் கொன்றுகுவித்து பதிலடி கொடுத்தனர். சிங்களக் காடையர்களின் இவ்வாறான அழிவு நடவடிக்கைகள் சிறிலங்காவின் ஜனநாயக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து மிகப் பெரிய இனப் படுகொலைகளுக்கு வழிவகுத்தன.
 

No comments:

Post a Comment