
யுத்தத்தின் போது மேற்கொள்ளப்பட்ட பணிகள் தொடர்பில் கடந்த ஏப்ரல் மாதம் மீளாய்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதாகவும், ஜூலை மாதமளவில் மீளாய்வுநடவடிக்கைகள் பூர்த்தியாகும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. சார்ளஸ் பெட்ரீ தலைமையிலான குழுவினர் இந்த மீளாய்வு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். இலங்கை யுத்தம் தொடர்பில் ஆலோசனை வழங்கும் நோக்கில் நிறுவப்பட்ட நிபுணர் குழுவின் பரிந்துரைகளில் ஒன்றாக இந்த மீளாய்வு கருதப்படுகின்றது.
இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பில் நிபுணர்கள் குழுவின் பரிந்துரைகள்மற்றும் மீளாய்வுகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர்பான் கீ மூன் தீர்மானித்துள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது.
No comments:
Post a Comment