பௌத்த
துறவிகள் பொதுச்சேவையை மேற்கொள்ள பாராளுமன்றமோ அல்லது உள்ளுராட்சி
மன்றங்களுக்கோ செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று கண்டி அஸ்கிரிய பீடத்தின்
மகாநாயக்கத் தேரர் உடுகம ஸ்ரீ புத்தரகித தேரர் தெரிவித்தார்.நேற்று மாலை கண்டி அஸ்கிரிய விகாரையில் இடம் பெற்ற வைபவம் ஒன்றின் போது அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது, இன்று பொதுச்
சேவையில் ஈடுபட்டுள்ள பலர் தமது உரிமைகளுக்காகப் பணிப்பகிஷ்கரிப்பு போன்ற போராட்டங்களை நடத்துகின்றனர். இதுபோல் பௌத்த மத குருமார்களும் பொதுச் சேவைக்காகச் சென்று பணிப்பகிஷ்கரிப்புக்களில் ஈடுபடத் தேவையில்லை.
அவர்கள் விகாரைகளில் இருந்து கொண்டு பௌத்த சமய வளர்ச்சிக்குப்பாடுபட்டால் அது மட்டும் போதுமானது என்றார்.
No comments:
Post a Comment