Thursday, June 14, 2012

இலங்கையில் மத சுதந்திரத்தை உறுதிப்படுத்துங்கள்: மத சுதந்திரத்திற்கான சர்வதேச கூட்டமைப்பு


world_evangelical_allianceஇலங்கையில் அனைத்து சமூகங்களுக்கு இடையே நம்பிக்கையினைக் கட்டியெழுப்ப, மத சுதந்திரத்தினையும் மத சமத்துவத்தினையும் உத்தரவாதப்படுத்துமாறு, இலங்கை அரசாங்கத்தினை World Evangelical Alliance அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இலங்கையில் சிங்கள பௌத்த இனவாதிகளினால் இந்து, கத்தோலிக்க, இஸ்லாமிய சமூகத்தினர் அச்சுறுத்தல்கள் சமீபத்திய காலங்களில் அதிகரித்து வரும் இந்த வேண்டுகோள் வெளிவந்துள்ளது.

தமிழர்களுக்கான நீதிவேண்டி மன்னார் மறைமாவாட்ட இராஜப்பு ஜோசப்பு ஆண்டைகையோடு, 31 கத்தோலிக்க குருமார்களினால் வெளியிடப்பட்ட அறிக்கையினையும் சுட்டிக்காட்டி, இலங்கை தொடர்பிலான அறிக்கையொன்றினை World Evangelical Alliance அமைப்பு வெளியிட்டுள்ளது.
மத சுதந்திரத்துக்கான சர்வதேச கூட்டமைப்பாக World Evangelical Alliance உள்ள நிலையில், இலங்கைத் தீவானது முன்னேற்றகரமான பாதையில் செல்ல, மதங்களின் சுதந்திரம் உத்தரவாத்தபடுத்தப்பட வேண்டும் என, இவ்வமைப்பின் பிரித்தானிய மேலாளர் Colin King தெரிவித்துள்ளார்.
நீண்ட உள்நாட்டு யுத்தத்தத் சூழலில், கத்தோலிக்க மத குருமார்கள் மற்றும் கத்தோலிக்க சேவர்கள் மீதான அச்சுறுத்தல்கள் நீடித்து வருவதாக சுட்டிக்காட்டியுள்ள Colin King அவர்கள், கத்தோலிக்கர்களின் வழிபாட்டு உரிமைகள் மறுக்கப்பட்டு வருவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்நிலையில், இலங்கையில் கத்தோலிக்க குருமார்கள் மற்றும் கிரிஸ்தவ வழிபாட்டு இடங்களில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் வன்முறை அச்சுறுத்தல்களுக்கு எதிராக, உலகத் கத்தோலிக்க மக்களை பிரார்தனை செய்யுமாறு இவ்வமைப்பினால் வேண்டப்பட்டுள்ளது.
மத சுதந்திரம், மத சமத்துவம், மத நல்லிணக்கம் மற்றும் சமாதானத்தினை வலியுறுத்தியும், இப்பிரார்த்தனைகளை மேற்கொள்ளுமாறு வேண்டப்பட்டுள்ளது.
தமிழீழத் தாயகத்தில் இந்து, இஸ்லாமிய, கிறீஸ்தவ மக்களின் மதச்சுதந்திரத்திற்கும், வழிபாட்டு உரிமைக்கும் எதிராக, சிங்களபௌத்த இனவாதிகளினால் கட்டவிழ்த்து விடப்பட்டுவரும் வன்முறைகளையும், அத்துமீறல்களையும் கவனத்தில் கொண்டு, தமிழர்கள் வாழும் நாடுகளில், மதவழிபாட்டுடன் கூடிய விழிப்புணர்வு போராட்டங்கள் எதிர்வரும் 15 – 16 – 17ஆம் திகதிகளில் பல்வேறு நாடுகளிலும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்பாடு செய்துவருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.Posted by sankathinews on June 13th, 2012


No comments:

Post a Comment