Thursday, June 28, 2012

செங்கல்பட்டு சித்திரவதை முகாமில் இருந்து எமது உறவுகளை விடுதலை செய்யக் கோரி யேர்மனியில் கவனயீர்ப்பு நிகழ்வு:

தமிழகத்தில் உள்ள செங்கல்பட்டு சித்திரவதை முகாமில் இருந்து தங்களை விடுதலை செய்யுமாறு கடந்த இருவாரமாக 29 ஈழத்தமிழர்கள் உண்ணா நிலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் அகதிகளில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட ஒன்பது பேர்கள் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் எட்டு பேர்களின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலதடவைகள் வாக்குறுதிகள் வழங்கியும் அவை நடைமுறைபடுத்தவில்லை இந்த நிலையில் தடுப்பு முகாமில் தமது விடுதலைக்ககா தாங்களே உண்ணாவிரதமிருக்கும் உறவுகள் தமது மரண வாக்கு மூலம் ஒன்றை தாங்களே கைப்பட எழுதி மருத்துவமனையில் இருந்து அனுப்பிவைத்துள்ளனர் அதில் "எங்கள் உயிர்களுக்கு ஆபத்து ஏற்பட்டால், முன்னர் எமக்கு கொடுத்த வாக்குறிதிகளை நிறைவேற்றத் தவறிய பொறுப்பில்லாத அதிகாரிகளே காரணமானவர்கள்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு முகாம்கள் இலங்கையில் இருக்கும் முள்வேலி முகாம்களுக்கு எந்த வகையிலும் குறைவானதில்லை. பெயருக்கு முகாம் என்று அழைக்கப்பட்டாலும், இது ஒரு சிறையை விட கொடிய இடமாக அரசால் பராமரிக்கப்பட்டு வருகிறது.கடந்த 2007 முதல் 2009 வரையான காலகட்டங்களில் ஈழத் தமிழர்கள் மீதான சிங்கள அரசின் கொலைவெறித் தாக்குதலில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டு, பலர் காயமடைந்தபோது அவர்களுக்கான அத்தியாவசிய மருந்துகளை, உயிர்காக்கும் மருந்துகளை தமிழகத்திலிந்து இலங்கைக்கு அனுப்ப முயன்றதாக பலர் கைது செய்யப்பட்டு இந்த முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது .
உண்ணா நிலையில் இருக்கும் உறவு தமிழர்களின் பாதுகாப்புக்கு தமிழீழமே இறுதி தீர்வாக அமைய வேண்டும் என்று உறுதியோடு குறிப்பிட்டிருந்தார் .
இவ் வகையல் திருமுருகன் காந்தி போன்ற பல்வேறு தமிழின உணர்வாளர்கள் அவர்களுக்காக குரல் கொடுத்து வரும் வகையில் புலம்பெயர் மக்களாகிய நாம் எமது உறவுகளுக்காக குரல் கொடுத்து போராடுவோம் :
மரணத்தின் விழிம்பில் மனித உரிமைக்காகப் போராடும் ஈழத்தமிழ் அகதிகளை ஆதரித்து , செங்கல்பட்டு சித்திரவதை முகாமில் இருந்து எமது உறவுகளை விடுதலை செய்யக் கோரி யேர்மனியில் கவனயீர்ப்பு நிகழ்வு
29.06.2012 அன்று காலை 9 மணிக்கு இந்திய தூதரகத்தின் முன்றலில்
Botschaft der Republik Indien
Tiergartenstrabe 17
10785 Berlin
ஈழத்தமிழர் மக்கள் அவை - யேர்மனி

No comments:

Post a Comment