தமிழர் நல பேரியக்கத்தின் முற்றுகைப் போராட்டத்தையடுத்து சிறிலங்கா கொழும்பு இசை நிகழ்வில் கலந்துகொள்ள மாட்டேன் என பாடகர் கரிகரன் உறுதியளித்துள்ளார்.
தமிழர் நல பேரியக்கம் மராட்டிய மாநில உறுப்பினர்கள் நேற்று வியாழக்கிழமை பாடகர் கரிகரன் வீட்டை முற்றுகையிட்டு, கொட்டும் மழைக்கு மத்தியிலும் காலையில் இருந்து கரிகரன் இசை நிகழ்வில் கலந்துகொள்ள சிறிலங்கா செல்வதைக் கண்டித்து போராட்டம் நடத்தினர்.
தமிழர் நலம் பேரியக்கத்தின் தலைவர் மு.களஞ்சியம் அவர்கள் கரிகரனிடம் அலைபேசியில் பேசி நிலைமையை விளக்கினார். இதனையடுத்து பாடகர் கரிகரன் இசை நிகழ்வில் கலந்துகொள்ள சிறிலங்கா போகமாட்டேன் என்று எழுத்தில் உறுதி அளித்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மே பதினேழு இயக்கமும் கரிகரன் இசை நிகழ்வில் கலந்து கொள்ளக்கூடாது என அறிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment