கைதடியில் அமைந்துள்ள அரச மருந்தகக் காணியை தன்வசமாக்க வடக்கு மாகாண சபை இரகசிய நடவடிக்கை எடுத்து வருகின்றது என்று பொது அமைப்புகள் விசனம் தெரிவிக்கின்றன.
குறித்த மருந்தகத்தை வேறு இடத்துக்கு மாற்றுவதற்கும் இந்தக் காணி
முழுவதையும் அபகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது என்றும்
கூறப்பட்டது. இந்த அரச மத்திய மருந்தகத்துக்கு ஐம்பது பரப்புக்கு மேற்பட்ட
காணி சொந்தமாகவுள்ளது.
தென்மராட்சி மேற்குப் பிரதேசத்தில் வசிக்கும் பல ஆயிரக்கணக்கான
மக்களின் மருத்துவ நலன் கருதி இந்தக் காணியில் அரச வைத்தியசாலை ஒன்றை
அமைப்பதற்கான நடவடிக்கைகளை இங்குள்ள பொது அமைப்புக்கள் எடுத்து வருகின்றன.
இந்த வேளையில் வடக்கு மாகாணசபை இக்காணியை பறிக்க முயற்சிப்பது
தமக்குப் பெரும் வேதனையளிப் பதாகவும் பலராலும் கவலை தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, இந்தக் காணியை மாகாணசபைக்குத் தாரை வார்த்துக்கொடுத்து தாம்
நல்லபெயர் எடுப்பதற் கான முயற்சியில் ஒரு சில அரச அதிகாரிகள் செயற்பட்டு
வருவதாகவும் விசனம் தெரிவிக்கப்படுகிறது.
சம்பந்தப்பட்டோர் மக்கள் நலன்கருதி இந்த விடயத்தில் கவனம் எடுத்து இங்கு
வைத்தியசாலை ஒன்றை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பலராலும்
வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment