Sunday, July 22, 2012

ஐ.நா விற்கு வாக்குமூலம் வழங்கியவரை இலங்கையிடம் கையளிக்க முயலும் அவுஸ்ரேலிய அரசு!

Dayan_Anthony2009 ஆம் ஆண்டு வன்னியில் இடம்பெற்ற போரின் இறுதியில் சிறீலங்கா இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டு  கடுமையான சித்திரவதைகளை அனுபவித்து உறவினர்களின் கடும் முயற்சியால்விடுதலை செய்யப்பட்ட டயான் அந்தோனி எனப்படும் “அன்பு” தற்போது அவுஸ்திரேலியாவில் அகதி தஞ்சம் கோரியுள்ளார்.
2010 ஆம் ஆண்டு இறுதிப் பகுதியில் அவுஸ்திரேலியாவிற்கு அகதியாகச் சென்ற இவர் தற்போது அவுஸ்ரேலியாவில் தடுப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளார்.

இவர் ஐக்கிய நாடுகள் சபையின் சிறிலங்காவிற்கு எதிரான சித்திரவதை விசாரணைக் குழுவினருக்கு தனது சாட்சியினை வழங்கியிருந்தார். அவ்விசாரணை இன்னும் முடிவுறாத பட்சத்தில், விசாரணை முடிவுறும் வரை இவரை இலங்கைக் அனுப்பவேண்டாம் என்று ஐக்கிய நாடுகள் சபையின் சிறிலங்காவிற்கு எதிரான சித்திரவதை விசாரணைக் குழு, அவுஸ்ரேலியா அரசினைக் கேட்டுக்கொண்டுள்ள போதும், அவுஸ்ரேலியா இவரை சிறிலங்காவிற்கு திருப்பி அனுப்பவுள்ளவர்களின் பட்டியலில் இணைத்துள்ளது.
2009 ஆம் ஆண்டிற்கு முன்னர் தமிழீழ விடுதலைப்புலிகளின் நிர்வாகத்தின் கீழ் வன்னிப்பெரு நிலப்பரப்பு இருந்த காலத்தில் வன்னியில் சேரன் வாணிபத்தின் கொள்வனவுப் பிரிவில் வேலைசெய்து வந்த “அன்பு” முள்ளிவாய்க்கால் சமரின் பின்னர் சிறிலங்கா இராணுவத்தினால் கைது செய்யப்பட்டார்.
இராணுவத்தின் மோசமான சித்திரவதையின் காரணமாக சற்று மனநிலை குலைந்த அன்பு இராணுவமுகாமிற்குள்ளேயே அடைபட்டுக்கிடந்தார். பின்னர் அன்பினுடைய உறவினர் மூலம் பெருந்தொகைப்பணத்தினை இராணுவத்திற்கு வழங்கி பின்னர் அவரை இராணூவத்தினர் விடுதலைசெய்திருந்தனர்.
விடுதலையாகிய பின்னர் அன்பு இலங்கையில் தனது பாதுகாப்பிற்று அச்சுறுத்தல் இருப்பதை உணர்ந்து அவுஸ்ரேலியாவிற்குத் தப்பிச்சென்றார். ஐக்கிய நாடுகள் சபையின் சிறிலங்காவிற்கு எதிரான சித்திரவதை விசாரணைக் குழுவினருக்கு அவுஸ்ரேலியாவில் அடைபட்டுக்கிடைந்த அன்பு தனது சாட்சியினை வழங்கியிருந்தார். அவ்விசாரணை இன்னும் முடிவுறாத பட்சத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் சிறிலங்காவிற்கு எதிரான சித்திரவதை விசாரணைக் குழு இவரை விசாரணை முடிவுறும் வரை இலங்கைக் அனுப்பவேண்டாம் என்று அவுஸ்ரேலியா அரசினைக் கேட்டுக்கொண்டுள்ள போதும் அவுஸ்ரேலியா அவரை சிறிலங்காவிற்கு அனுப்பவுள்ளவர்களின் பட்டியலில் இணைத்து அவரை அனுப்புவதற்கு முடிவு செய்துள்ளது.
இதே வேளை கடந்த ஆண்டு (25.04.2011) மீண்டும் இவருக்கான பிடியாணையை சிறீலங்கா அரசு வழங்கியுள்ளமையும், தற்போது அவுஸ்திரேலிய அரசு இவரை சிறீலங்காவிற்கு திருப்பியனுப்பவுள்ளவர்கள் பட்டியலில் இணைத்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகளின் வர்த்தக நிலையம் ஒன்றில் வேலைசெய்தார் என்ற ஒரே காரணத்திற்காக ஏற்கனவே கடுமையான சித்திரவதைகளை அனுபவித்து மனனிலை பாதிக்கப்பட்டிருந்த “அன்பு” அவர்கள் தற்போது இலங்கை அரசிற்கும், அரச படைகளுக்கும் எதிராக அவர்களின் குற்றச்செயல்கள் தொடர்பாக  ஐக்கிய நாடுகள் சபைக்கு வாக்குமூலம் அளித்துள்ள நிலையில் அவர் மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டால் அவரின் உயிருக்கு ஆபத்து நிச்சம் ஏற்படலாம் என்ற அச்சத்தில் உறவினர்கள் உள்ளனர்.
இவரின் நாடுகடத்தலுக்கு எதிராக தமிழ் அமைப்புக்கள், மனித நேய செயற்பாட்டாளர்கள் ஆவன  செய்யவேண்டும் எனவும் உறவினர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment