Thursday, July 19, 2012

கடற்புலிகள் வகுத்த தந்திரோபாயங்களால் உலக கடற்படைகளுக்கு நெருக்கடி!- இலங்கை படைத்தரப்பு

sea_ltte_001விடுதலைப் புலிகளின் கடற்படைப் பிரிவான கடற்புலிகளால் தற்போது அச்சுறுத்தல் இல்லாத போதும், அவர்களின் தந்திரோபாயங்களால் உலகிலுள்ள கடற்படைகளுக்கு தொடர்ந்தும் நெருக்கடிகள் உள்ளதாக இலங்கை படைத்தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
கடற்புலிகள் தமது அனுபவங்களையோ அல்லது நிபுணத்துவத்தையோ வெளிநாட்டு தீவிரவாத சக்திகளுடன் பகிர்ந்து கொண்டதற்கான எந்த உறுதியான ஆதாரங்களும் இல்லாத போதிலும், அவர்களின் தந்திரங்களை பயன்படுத்தி தாக்குதல்கள் இடம்பெறுவதற்கு சாத்தியங்கள்
உள்ளதாகவும் இலங்கையின் மூத்த படைஅதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களின் படகு ஒன்றின் மீது டுபாய் கடற்பரப்பில் வைத்த அமெரிக்க கடற்படைக்கப்பல் ஒன்று நடத்திய தாக்குதல் குறித்து கருத்து வெளியிட்டுள்ள போதே, அந்த அதிகாரி இவ்வாறு கூறியுள்ளார்.
2000ம் ஆண்டு ஒக்ரோபர் 12ம் நாள் ஏடன் துறைமுகத்தில் 17 அமெரிக்கக் கடற்படையினர் கொல்லப்பட்ட- ‘யுஎஸ்எஸ் கூல்‘ என்ற அமெரிக்க கடற்படைக் கப்பல் மீதான தாக்குதலுக்குப் பின்னர், பிபிசிக்குப் செவ்வியளித்த கடற்புலிகளின் தளபதி சூசை, ‘அல்குவைடா‘ தமது தந்திரங்களைப் பயன்படுத்தியிருப்பதாக கூறியிருந்தார் என்றும் இலங்கை படைஅதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.
தம்மீது மீனவர்களின் படகு தற்கொலைத் தாக்குதல் நடத்த வருகிறதோ என்ற அச்சத்தினால், அமெரிக்க கடற்படையினர் தாக்குதல் நடத்தியிருக்கலாம் என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment