Thursday, July 19, 2012

போராட்டங்கள் மூலம்தான் எம் உரிமைகளை பெற்றுக்கொள்ள முடியும் – அருட்தந்தை ஜெயக்குமார்

fd54cdb92bccccec0a93d277c2a11204போராட்டங்கள் மூலம்தான் எம் உரிமைகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவே  எனவே அனைத்து தரப்புக்களையும் ஒன்று திரட்டி வடபகுதி கடற்பரப்பில் மேற்கொள்ளப்படும் அத்துமீறல்கள் தொடர்பில் அமைதிமுறை போராட்டங்களில் ஈடுபட வேண்டும் என அருட்தந்தை ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

வட பகுதி கடற்பரப்பில் இந்திய கடற்றொழிலாளர்களினால் மேற்கொள்ளப்படும் அத்துமீறல்களினால் வடபகுதி மீனவர் முகம்கொடுக்கின்ற பிரச்சினைகள் தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்றில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்,
வடக்கு, கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்திய மற்றும் தென்பகுதி கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்கள் தொடர்பில் இலங்கை மற்றும் இந்திய அரசு அசட்டையீனமாகவே உள்ளது எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், இப் பிரச்சினைக்கு நீண்ட காலமாக வடபகுதி மீனவர்கள் முகம் கொடுத்து வருவதாகவும், இது தொடர்பில் மேற்கொண்ட பல நடவடிக்கைகளும் இதுவரை பலனளிக்கவில்லை,
இலங்கை – இந்திய அரசுதான் இவ்விடயத்திற்கு முடிவு எடுக்க வேண்டும். ஆனால் இரண்டு அரசும் இவ்விடயத்தில் அக்கறை இல்லாது இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதவிடையமெனவும்,
எனவே இருநாட்டு அரசுகளின் கவனத்தையும் ஈர்க்க வேண்டுமானால் அனைவரும் ஒன்று திரண்டு போராட வேண்டும். போராடாது இருந்தால் எதுவும் கிடைக்காது. அது உரிமையாக இருந்தாலும் சரி. வாழ்வாதாரமாக இருந்தாலும் சரி.சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். என மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment